இராஜாங்க அமைச்சரின் வீட்டை சுற்றிவளைத்து மக்கள் போராட்டம்(video)
இராஜாங்க அமைச்சரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருமான சாந்த பண்டாரவின் வீட்டை நேற்றையதினம் ஆர்ப்பாட்டக்காரர்கள் குழுவொன்று சுற்றிவளைத்து போராட்டத்தில் ஈடுபட்டது.
மோசமான பொருளாதார நெருக்கடி காரணமாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கத்தில் இருந்து விலகிய போதிலும், நாடாளுமன்ற உறுப்பினர் சாந்த பண்டார விவசாய இராஜாங்க அமைச்சராக அண்மையில் அரச தலைவரின் முன்பாக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.
தற்போதைய அரசாங்கத்தின் அமைச்சுப் பதவியை ஏற்றுக்கொள்வதற்கு அவர் எடுத்த தீர்மானம் தொடர்பில் அதிருப்தி தெரிவிக்கும் வகையில் ஆர்ப்பாட்டக்காரர்கள் அமைச்சரின் வீட்டைச் சுற்றி வளைத்திருந்தனர். அத்துடன் அமைச்சரை அவரது இல்லத்தை விட்டு வெளியேறுமாறும் அவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
People surrounded @SLFPSriLanka MP Shantha Bandara's house who was recently sworn in as a state minister demanding him to come out.#lka #SriLankaProtests #SriLankaCrisis #GoHomeGota #GoHomeRajapaksas #පන්නමු pic.twitter.com/9yt0HayUS3
— Prasad Welikumbura (@Welikumbura) April 14, 2022
