முன்னெச்சரிக்கை இன்றி சுட்டுத்தள்ளுக!! இராணுவத்தினருக்கு உத்தரவிட்டார் கசகஸ்தான் அதிபர்
ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது முன்னெச்சரிக்கை விடுக்கமால் துப்பாக்கிச் சூடு நடத்துவற்கு கசகஸ்தான் அதிபர் காசிம் ஜோமார்ட் டோக்யேவ் அந்நாட்டு இராணுவத்தினருக்கு உத்தரவிட்டுள்ளார்.
கசகஸ்தானில் ஏற்பட்டுள்ள ஆர்ப்பாட்டத்தைக் கட்டுப்படுத்தும் வகையில், காசிம் ஜோமார்ட் டோக்யேவன் கோரிக்கைக்கு அமைய, ரஷ்யா தனது இராணுவத்தினரை அந்த நாட்டிற்கு அனுப்பிவைத்துள்ளது.
கசகஸ்தானில் எரிபொருட்கள் மீதான விலை திடீரென அதிகரிக்கப்பட்டதன் விளைவாக மக்கள் பாரிய போராட்டங்களை முன்னெடுத்துவருகின்றனர்.
அதிபர் மாளிகை உள்ளிட்ட பல முக்கிய இடங்களை மக்கள் முற்றுகையிட்டு போராட்டங்களை நடத்தி வருகின்றமையினால் நாட்டில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், நாட்டை அமைதி நிலைக்கு கொண்டுவரும் வகையில் கசகஸ்தான் அதிபர், விடுத்த கோரிக்கைக்கு அமைய ரஷ்யப் படைகள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.