திசை மாறும் அநுர அரசு : மக்களிடம் ஆரம்பித்துள்ள அதிருப்தி
இலங்கை அரசியல் வரலாற்றில் பாரிய திருப்புமுனையை ஏற்படுத்தி ஆட்சியமைத்த அரசாங்கமாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் (Anura Kumara Dissanayake) அரசாங்கம் சர்வதேச அளவில் பேசப்பட்டது.
இந்தநிலையில், அநுர அரசாங்கம் மீதான எதிர்ப்பார்ப்பும் மற்றும் நம்பிக்கையும் மக்களிடம் உச்சம் பெற்றிருந்தது.
இதன் காரணமாக மக்களுக்கான சிறந்த ஆட்சியை வழங்குவதில் அநுர அரசு பாரிய கவனம் செலுத்தி வருகின்ற நிலையில் இதில் முக்கிய விடயமாக கிளீன் சிறிலங்கா திட்டம் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.
இதில் முதல் திட்டமாக வாகனங்களில் காணப்படுகின்ற அலங்காரப்பொருட்கள் அகற்றும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் இது தொடர்பில் ஒரு தரப்பு மக்கள் சாதகமான கருத்துக்களை வௌயிட்டாலும் ஒரு தரப்பினர் இது குறித்து விமர்சனங்களையும் முன்வைத்து வருகின்றனர்.
இந்தநிலையில், இந்த கிளீன் சிறிலங்கா திட்டம் குறித்தும் இது தொடர்பில் மக்கள் தெரிவித்த கருத்துக்களுடனும் வருகின்றது இன்றைய மக்கள் குரல் நிகழ்ச்சி,
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |