யாழில் அமைக்கப்படவுள்ள நவீன வசதிகளுடன் கூடிய பொது விளையாட்டு மைதானம்

Jaffna Sri Lanka Water Board
By Sathangani Aug 04, 2025 10:53 AM GMT
Sathangani

Sathangani

in சமூகம்
Report

யாழ்ப்பாணம் (Jaffna) - வேலணை பிரதேசத்திற்கான நவீன வசதிகளுடன் கூடிய பொது விளையாட்டு மைதானம் ஒன்றை அமைப்பதற்கான அமைவிடத்திற்கு துறைசார் அதிகாரிகள் நேரில் சென்று கள ஆய்வுகளை மேற்கொண்டுள்ளனர்.

வேலணை - அராலி சந்தி பகுதியில் விளையாட்டு மைதானத்தை அமைப்பதற்கு இணக்கம் தெரிவித்துள்ள நிலையில் குறித்த கள ஆய்வு இன்றையதினம் (04.08.2025) காலை இடம்பெற்றது.

வேலணை பிரதேச சபையின் கோரிக்கையை ஏற்று வேலணை பிரதேச சபையின் தவிசாளர், வேலணை பிரதேச சபையின் செயலாளர் ஆகியோருடன் வேலணை பிரதேச செயலக அதிகாரிகள், நீர்ப்பாசன திணைக்கள அதிகாரிகள், காணி அதிகாரி மற்றும் துறைசார் அதிகாரிகள் ஒன்றிணைந்தே மேற்கொண்டிருந்தனர்.

செம்மணியில் ஆரம்பமானது ஸ்கேன் பரிசோதனை!

செம்மணியில் ஆரம்பமானது ஸ்கேன் பரிசோதனை!

நீர்ப்பாசன திணைக்களம் இணக்கம் 

ஆய்வை மேற்கொண்ட அதிகாரிகள் வேலணை பிரதேசத்தில், இலங்கை நீர்ப்பாசன திணைக்களத்தின் அதிகார எல்லைக்குள் அராலி சந்தியில் இருக்கும் அரச காணியை வேலணை பிரதேசம் மட்டுமல்லாது தீவகம் முழுவதுமான விளையாட்டு துறையின் நலன்கருதி தூரநோக்குள்ள பார்வையுடன் சில வரையறைகளுடன் குறித்த நிலப்பரப்பை வழங்குவதற்கு நீர்ப்பாசன திணைக்களம் இணக்கம் தெரிவித்துள்ளது.

யாழில் அமைக்கப்படவுள்ள நவீன வசதிகளுடன் கூடிய பொது விளையாட்டு மைதானம் | Public Playground With Modern Facilities In Jaffna

அத்துடன் விளையாட்டு மைதானத்தை அமைப்பதற்கான திட்டமுன்மொழிவுடன் கூடிய பொறிமுறைகளை தயாரித்து துறைசார் வழிமுறைகளூடாக அதை சமர்ப்பிக்குமாறும் வேலணை பிரதேச சபைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சிஐடியில் முன்னிலையானார் அர்ச்சுனா எம்.பி

சிஐடியில் முன்னிலையானார் அர்ச்சுனா எம்.பி

வேலணை பிரதேச சபை

வேலணை பிரதேசத்தின் விளையாட்டுத்துறையை மெருகூட்டும் செயற்றிட்டத்தின் தொடர் நடவடிக்கையாக பொது மைதானம் ஒன்றை அமைப்பதற்கான நடவடிக்கை வேலணை பிரதேச சபையால் கடந்த 2018 ஆம் ஆண்டுமுதல் பல்வேறு வழிகளில் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

யாழில் அமைக்கப்படவுள்ள நவீன வசதிகளுடன் கூடிய பொது விளையாட்டு மைதானம் | Public Playground With Modern Facilities In Jaffna

தற்போது அதற்கான ஏதுநிலைகள் உருவாகியுள்ள நிலையில் மைதானத்தை அமைப்பதற்காக 4 ஏக்கர் நிலப்பரப்பு வழங்கப்படவுள்ளதுடன் குறித்த மைதான வளாகத்திற்குள் நவீன வசதிகளுடன் விளையாட்டு துறைசார் கட்டுமாணங்களை அமைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

அத்துடன் குறித்த நிலப்பரப்பு நீரேந்து பகுதியாக இருப்பதனால் நீர் சேகரிப்பு செயற்பாடுகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் மைதானம் அமைப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக பிரதேச சபையின் தவிசாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

செம்மணி விவகாரத்தில் திருப்புமுனையாக அமைந்த சோமரத்னவின் முடிவு : சித்தார்த்தன் பகிரங்கம்

செம்மணி விவகாரத்தில் திருப்புமுனையாக அமைந்த சோமரத்னவின் முடிவு : சித்தார்த்தன் பகிரங்கம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், மாசார் பளை

05 Nov, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, Tellipallai

06 Nov, 2025
மரண அறிவித்தல்

வேலணை வடக்கு, கொழும்பு

06 Nov, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெடுங்கேணி, London, United Kingdom

01 Nov, 2025
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், Jaffna, யாழ்ப்பாணம், Pinner, United Kingdom

03 Nov, 2025
மரண அறிவித்தல்

துன்னாலை, Croydon, United Kingdom

03 Nov, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு

05 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Edinburgh, Scotland, United Kingdom

04 Nov, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், ஹற்றன், London, United Kingdom

02 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், மண்டைதீவு

06 Nov, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுங்கேணி, பிரான்ஸ், France

02 Nov, 2020
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மானிப்பாய், கொழும்பு

31 Oct, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, தமிழ் ஈழம், Hildesheim, Germany

30 Oct, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நவிண்டில், Toronto, Canada

01 Nov, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கன்னாதிட்டி, Velbert, Germany, Brampton, Canada

04 Nov, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024