விபரங்களை மறைத்தாரா கோட்டாபய? அம்பலத்துக்கு வந்த தகவல்
அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் கிட்டத்தட்ட 5000 மில்லியன் அமெரிக்க டொலர் கடன்கள் பல்வேறு நாடுகளில் இருந்தும் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க (Patali Champika Ranawaka) தெரிவித்துள்ளார்.
கடந்த இரண்டு வருடங்களில் மாத்திரம் 5,187.5 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், குறித்த கடன் விபரங்களை தனது முகநூல் பக்கத்தில் பட்டியலிட்டு வெளியிட்டுள்ளார்.
அண்மையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச தனது, கடந்துவந்த 2 வருட ஆட்சிக் காலத்தில் கடன் எதுவும் பெறப்படவில்லை என்று பகிரங்கமாக கூறியிருந்த நிலையில், பாட்டலி சம்பிக்க ரணவக்க அரசாங்கம் கடந்த இரு வருடங்களில் பெற்றுக்கொண்டுள்ள கடன் விபரங்களை பகிரங்கப்படுத்தியுள்ளார்.
You may like this