புதுக்குடியிருப்பில் கொரோனா தொற்றாளருடன் தொடர்பிலிருந்த 194 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்

Covid-19 Puthukudiyiruppu Self-isolation
By Vasanth Dec 28, 2020 01:44 AM GMT
Report

புதுக்குடியிருப்பில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட மரக்கறி மொத்தவியாபாரத்தில் ஈடுபட்ட நபருடன் தொடர்புடைய 65 பேரும் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் 129 பேருமாக 194 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என அறியமுடிகிறது முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் எழுமாறாக நடத்தப்பட்ட பி சிஆர் பரிசோதனையில் நேற்று வெளியான முடிவுகளில் (26) ஒருவர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளார் .

இவர் தம்புள்ள பகுதிக்கு சென்று மரக்கறிகளை பெற்று வந்து புதுக்குடியிருப்பு, உடையார்கட்டு, விசுவமடு சந்தை வியாபாரிகளுக்கு வழங்கும் நபர் என முதல்கட்ட விசாரணைகளில் உறுதியாகியது இந்நிலையில் நேற்று (26) மாலை பி சிஆர் முடிவுகள் கிடைக்கும் வரை குறித்த நபர் சமூகத்தில் நடமாடியுள்ளார் இதனால் புதுக்குடியிருப்பு பகுதி அபாய வலயமாகுமா என மக்கள் மத்தியில் அச்சம் தோன்றிய நிலையில் குறித்த நபர் வீட்டுக்குள் முடக்கப்பட்டு இராணுவம், பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டு சுகாதார அதிகாரிகள் குறித்த நபர் நடமாடிய இடங்கள் தொடர்பான தகவல்களை பெற்றுக்கொண்டு அவர் கிளிநொச்சி கிருஷ்ணபுரத்தில் உள்ள கொரோனா சிகிச்சை நிலையத்துக்கு நோயாளர் காவுவண்டியில் அழைத்து செல்லப்பட்டார் இந்நிலையில் அவருடன் தொடர்பிலிருந்தவர்களை தனிமைப்படுத்தப்படும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டது.

.இதனடிப்படையில் மரக்கறி மொத்தவியாபாரத்தில் ஈடுபட்ட நபருடன் தொடர்புடைய 65 பேரும் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் 129 பேருமாக 194 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என அறியமுடிகிறது இதேவேளை புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் பல்வேறுபட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது குறிப்பாக இராணுவத்தினர் சந்தை வளாகம் மற்றும் வர்த்தக தொகுதிகளை கிருமி தொற்று நீக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதனை அவதானிக்க கூடியதாக இருந்த அதே நேரம் பொலிசார் குறித்த தொற்றாளியுடன் தொடர்புகளை மேற்கொண்ட நபர்களை அடையாளம் காணும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர் அத்துடன் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் கிராமங்களுக்குச் சென்று குறித்த தொற்றாளியுடன் நேரடியாக தொடர்புகளை மேற்கொண்டிருந்த நபர்களை அடையாளம் காணும் நடவடிக்கையிலும் தனிமைப்படுத்தல் செயற்பாடுகளிலும் ஈடுபட்டனர் இப்பகுதிகளில் சந்தை நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டுள்ளதுடன் பல இடங்களிலும் மீன் வியாபாரம், மரக்கறி வியாபாரம் நிறுத்தப்பட்டுள்ளது குறித்ததொற்றாளி தம்புள்ள சந்தையில் இருந்து மரக்கறிகளை புதுக்குடியிருப்பு விசுவமடு உடையார்கட்டு உள்ளிட்ட சந்தைகளுக்கு வினியோகம் செய்பவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது நேற்று(26) இரவு வரை குறித்த நபர் சமூகத்தில் நடமாடி இருப்பதனால் தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் எனவும் அச்சம் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

ReeCha
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
அகாலமரணம்