அறிவிக்கப்பட்டது புடினின் முடிவு: உண்மையை போட்டுடைத்த ட்ரம்ப்!
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் (Vladimir Putin) தற்போது வெற்றி பெற்று வருவதாக நம்புவதால், உக்ரைனில் போரை முடிவுக்குக் கொண்டுவர விரும்பவில்லை என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) தெரிவித்துள்ளார்.
குறித்த விடயத்தை ஐரோப்பிய தலைவர்களிடம் தனிப்பட்ட தொலைபேசி அழைப்பின் போது தெரிவித்ததாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன், ஜெர்மன் ஜனாதிபதி பிரீட்ரிக் மெர்ஸ், இத்தாலிய பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி மற்றும் ஐரோப்பிய ஆணைக்குழு தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் உள்ளிட்ட ஐரோப்பிய தலைவர்களுடன் தொலைபேசியில் ட்ரம்ப் இதனை கூறியுள்ளார்.
ட்ரம்ப்பின் எண்ணம்
புடின் அமைதிக்குத் தயாராக இல்லை என்ற எண்ணத்திற்கு ட்ரம்ப் வந்ததாகத் தோன்றினாலும், இதுவரை, புடின் அமைதியை விரும்புகிறார் என்று பகிரங்கமாகப் பராமரித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
ஐரோப்பிய தலைவர்களுடன் ஒரு முந்தைய தொலைபேசி அழைப்பில், புடின் போர் நிறுத்தத்தை மறுத்தால் ரஷ்யா மீது தடைகள் விதிக்கப்படலாம் என்று ட்ரம்ப் கூறியிருந்தார்.
அமெரிக்காவின் நிலைப்பாடு
இருப்பினும், அடுத்த நாளுக்குள், ட்ரம்ப் தனது போக்கை மாற்றிக்கொண்டதாகவும், ரஷ்யாவிற்கு எதிராக அத்தகைய வற்புறுத்தல் தந்திரத்தை ட்ரம்ப் பிரயோகிக்க தயாராக இல்லை என்றும் சர்வதேச வட்டாரங்கள தெரிவிக்கின்றன.
“இது என்னுடைய போர் அல்ல. நாம் ஈடுபடக்கூடாத ஒன்றில் சிக்கிக்கொண்டோம்” என்று ட்ரம்ப் ஊடகவியாலாளர்களிடம் கூறியுள்ளதானது, இந்த விடயத்தில் அமெரிக்கா ஒரு ஆக்ரோஷமான நிலைப்பாட்டை எடுக்கப் போவதில்லை என்பதை எடுத்துக் காட்டுவதாக மேலும் கூறப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
