பாரசீக வளைகுடாவின் கப்பல் போக்குவரத்து! கத்தார் வெளியிட்ட அறிவிப்பு
பாரசீக வளைகுடா பகுதியில் ஞாயிற்றுக்கிழமை முதல் அனைத்து வகையான கப்பல்கள் மற்றும் படகுகளின் போக்குவரத்து முழுமையாக மீண்டும் தொடங்கும் என்று கத்தாரின் போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை அனைத்து வகையான கப்பல்களும் பயணிக்க அனுமதி அளிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி, மீன்பிடிக்க உரிமம் பெற்ற படகுகள் நாள் முழுவதும் கடலில் பயணிக்க அனுமதிக்கப்படும் என்றும் அந்த அறிக்கை கூறுகிறது.
ஈரானின் ஒத்துழைப்பு
கடல் பயணங்களின் போது மிக உயர்ந்த பாதுகாப்புத் தரத்தைப் பேணுவதற்கு ஏதுவாக, அனைத்துப் பாதுகாப்பு உபகரணங்களும் முறையாகச் செயல்படுவதை உறுதி செய்யுமாறு கப்பல் இயக்குநர்களுக்கு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
🔴 ANNOUNCEMENT
— Ministry of Transport 🇶🇦 وزارة المواصلات (@MOTQatar) April 11, 2026
⛴️🚤#MOTQatar #Qatar pic.twitter.com/N1r0fEkFGM
ஹோர்முஸ் நீரிணையை தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஈரான், கத்தாரின் இந்த முடிவில் தங்களுக்கு ஏதேனும் ஒருங்கிணைப்பு உள்ளதா என்பது குறித்து இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்தத் தகவலையும் வெளியிடவில்லை.
மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் பாகிஸ்தானில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வரும் நிலையில், கத்தாரின் இந்த முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |