கியூ.ஆர் மோசடி தொடர்பில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட முறைப்பாடு!
மத்திய கிழக்கில் நிலவும் நெருக்கடிச் சூழல் காரணமாக இலங்கையில் ஏற்பட்டுள்ள எரிபொருள் சிக்கலின் மத்தியில் மற்றவர்களின் கியூ.ஆர் குறியீடுகளைப் பயன்படுத்தி எரிபொருள் பெறும் மோசடி நடவடிக்கைகள் தொடர்பாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக டிஜிட்டல் பொருளாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இது தொடர்பான முறைப்பாடுகள் குறித்து காவல்துறையுடன் இணைந்து விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் வர்ண ஸ்ரீ தனபால சுட்டிக்காட்டியுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
60 இலட்சத்திற்கும் அதிகமான கியூஆர் குறியீடு பதிவு
பெறப்பட்ட முறைப்பாடுகளில் ஸ்ரீ, 150 இற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் மேலதிக நடவடிக்கைக்காக காவல்துறைக்கு அனுப்பப்பட்டுள்ளன என்றும், அந்தச் சம்பவங்கள் தொடர்பாக காவல்துறை ஏற்கனவே பலரைக் கைது செய்துள்ளது என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

மேலும், எரிபொருள் நிலையங்களில் உள்ள பாதுகாப்பு கண்காணிப்பு கருவிகளை சரிபார்த்து, சந்தேக நபர்களைக் கைது செய்ய காவல்துறை நடவடிக்கை எடுத்து வருவதாக அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், தற்போது 60 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் கியூ.ஆர் குறியீட்டைப் பெற பதிவு செய்துள்ளதாகவும் அறிக்கைகள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |