QR முறைமை இன்றிய எரிபொருள் விநியோகம் இன்றுடன் நிறைவு
இன்று (18) நள்ளிரவு முதல் பெற்றோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறைமையின் கீழ் எரிபொருள் விநியோகிக்கப்படும் என இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.
முன்னர் நடைமுறையில் இருந்ததைப் போன்றே பெற்றோல் வாகனங்களுக்கான எரிபொருள் ஒதுக்கீடு வழங்கப்படும் என அதன் தலைவர் டி.ஜே. ராஜகருணா தெரிவித்துள்ளார்.
பண்டிகைக் காலத்தையொட்டி கடந்த 11ஆம் திகதி நள்ளிரவு முதல் பெற்றோல் வாகனங்களுக்கான QR முறைமை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்தது.
டீசல் வாகனங்கள்
இதன்படி, இன்று நள்ளிரவு முதல் 'ஒற்றை - இரட்டை' இலக்க முறையின் கீழ் அனைத்து வாகனங்களுக்கும் QR முறைமையினூடாக மாத்திரமே எரிபொருள் விநியோகிக்கப்படவுள்ளது.

எனினும், இந்த QR முறைமையின்றிய எரிபொருள் விநியோக சலுகை டீசல் வாகனங்களுக்கு செயல்படுத்தப்படவில்லை.
இந்த நிலையில் கார்களுக்கு 25 லீற்றரும், முச்சக்கர வண்டிகளுக்கு 20 லீற்றரும், மோட்டார் சைக்கிள்களுக்கு 8 லீற்றரும், பேருந்துகளுக்கு 100 லீற்றரும் வான்களுக்கு 50 லீற்றரும் வாராந்த எரிபொருள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |