நாடாளுமன்றில் அமைச்சர் உதய கம்மன்பிலவிடம் எழுப்பப்பட்ட கேள்வி
parliament
question
udaya gamanpila
By Sumithiran
நாடாளுமன்றம் இன்றையதினம் சபாநாயகர் லக்ஸ்மன் யாபா அபேவர்தன தலைமையில் கூடியபோது, வாய்மூல விடைக்கான வினாக்களும் அதற்கான பதில்களும் அளிக்கப்பட்டன.
இதன்போது வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவிடம், கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவர் பதிலளித்து கொண்டிருந்தார்.
இந்நிலையில், குறுக்கு கேள்வியொன்றை எழுப்பிய ஐக்கிய மக்கள் சக்தியின் இரத்தினபுரி மாவட்ட எம்.பியான ஹேசான் விதானகே, இந்த அமைச்சின் அமைச்சராக இருக்கும் இறுதி நாளாகக்கூட உங்களுக்கு இருக்கலாம், ஏனெனில், இந்த அரசாங்கத்தில் இருக்கும் காட்போட் வீரர்கள், அமைச்சர்களாகலாம் என விளித்து கூறிவிட்டு கேள்வியை எழுப்பினார்.
அவரது கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் உதய கம்மன்பில, “பிரச்சினைகளிலிருந்து தப்பியோடியவன் நானல்ல, எனது அரசியல் வாழ்க்கையில் அவ்வாறு இடம்பெறவில்லை” என்றார்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி