யாழ் நூலக புனரமைப்புக்காக ஒதுக்கப்பட்ட நிதி : சபையில் கொந்தளித்த கஜேந்திரகுமார்
யாழ் (Jaffna) நூலகத்தை புனரமைப்பதற்கு நூறு மில்லியன் ரூபாய் போதாது என யாழ் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சுட்டிக்காட்டியுள்ளார்.
குறித்த விடயத்தை இன்று (25) நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “இலங்கையிலுள்ள அடிப்படை இனப்பிரச்சினைக்கு காரணம், நாட்டில் காணப்படும் இனவாதமே ஆகும்.
இந்தநிலையில், அன்று முதல் இன்று வரை தொடர் பிரச்சினைக்கு வடக்கு மற்றும் கிழக்கு மக்கள் முகம் கொடுத்து வருகின்ற நிலையில், தற்போதைய அரசினால் சரி அதற்கு ஒரு தீர்வு கிடைக்கும் என நினைத்தோம்.
இதனடிப்படையில், கொண்டு வரப்பட்ட வரவு செலவு திட்டத்தில் போரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவியைத் தான் நாங்கள் எதிர்பார்த்தோம்.
ஆனால், வரவு செலவு திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ள நிதி வடமாகாணத்திற்கு போதுமானதாக இல்லை” என அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
