பெரும்பான்மையினரின் அடாவடிக்கு ஒருபோதும் இடமளியோம்: பொங்கி எழுந்தார் சம்பந்தன்
பெரும்பான்மையினரின் சண்டித்தனத்துக்கு நாம் ஒருபோதும் இடமளியோம் என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழர் தலைநகரான திருகோணமலையில் பௌத்த விகாரைகளை நிறுவவும், மேலும் சட்டவிரோதச் சிங்களக் குடியேற்றங்களை அமைக்கவும் பேரினவாதம் முயற்சிக்கின்றது.
பெரிய நிகழ்ச்சித் திட்டம்
"வடக்கு - கிழக்கு தமிழர்களின் தாயகம். எமது தாயகத்தின் தலைநகர் திருகோணமலை.
இங்கு தமிழர்களை ஒதுக்க அல்லது இல்லாதொழிக்கச் சிங்கள - பௌத்த அடிப்படைவாதிகள் பெரிய நிகழ்ச்சித் திட்டத்தைத் தயாரித்து வருகின்றனர். பெரும்பான்மையினரின் எண்ணம் ஒருபோதும் நிறைவேறாது. அவர்களின் சண்டித்தனத்துக்கு நாம் ஒருபோதும் இடமளியோம்.
தமிழர்கள் பெருமளவில் வாழும் இடங்களில் பௌத்த விகாரைகள் எதற்கு? சட்டவிரோதச் சிங்களக் குடியேற்றங்கள் எதற்கு? இந்த அடாவடிச் செயற்பாடுகளை அதிபரின் கவனத்துக்குக் கொண்டு வந்துள்ளேன்." என தெரிவித்துள்ளார்.