வானிலை தொடர்பில் 11 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை
நாட்டின் பல பகுதிகளில் பலத்த மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அத்தோடு, 07 மாவட்டங்களுக்கு இன்று (17) கடும் மின்னல் தாக்கம் குறித்த சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதோடு 11 மாவட்டங்களுக்கு இரண்டாம் நிலை எச்சரிக்கையான “அம்பர்” எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
மேல் மாகாணத்தின் கொழும்பு மற்றும் களுத்துறை மாவட்டங்கள், தென் மாகாணம், மொனராகலை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் கடும் மின்னல் தாக்கம் நிலவக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழை
இந்த வானிலை அறிக்கை இன்று இரவு 11.00 மணி வரை நடைமுறையில் இருக்கும் வகையில் வெளியிடப்பட்டுள்ளது.

இதேவேளை இன்று பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் நாட்டின் பல இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |