ஜெனிவா தலையீடு கோரும் ராஜபச்ச AND CO! ஏன்... ஏதற்கு...
இலங்கையில் தமிழர்களை மையப்படுத்திய ஜெனிவா தீர்மானம் உட்பட்ட ஐ.நா மனிதஉரிமை பேரவையின் நடவடிக்கைகளை கடுமையாக எதிர்த்த மகிந்த அதிகாரமைய போராசிரியர்.. மன்னிக்கவும் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ், போன்ற அன்ட கோக்கள் நிலா நிலா ஓடிவா பாணியில் ஐ.நாவின் ஜெனிவா அரங்கமே ஓடி வா வா நில்லாமல் ஓடிவா என வருந்தி அழைக்கும் நிலைமை வந்துவிட்டது.
நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை நீட்டிக்கும் அனுர தரப்பின் நகர்வுகளை தமது எதிர்ப்பு துருப்புசீட்டு அரசியலாக பிடித்துளள்மை இந்த அன்ட் கோ முகம் கொழும்பில் உள்ள ஐ.நா. வதிவிட பணியகத்துக்கு நேற்று ஓடோடிசென்று அனுர அரசாங்கத்துக்கு ஜெனிவா அழுத்தத்தை உருவாக்கவேண்டும்!
அரசாங்கத்திடம் விளக்கம் கோரவேண்டும் அடுத்த ஜெனிவா அமர்வில்; இந்த விடயம் சேர்க்கப்படவேண்டும் என டம் டும் என விடாப்பிடியாய் நிற்கின்றன.
தமிழர்கள் மீதான போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை பிரச்சனைகளை ஜெனிவா அரங்கில் இருந்து எடுக்கவேண்டும் என பலவருடங்களாக கத்தித்குளறும் அன்ட் கோ முகங்கள் இப்படி ஒரு நிலைப்பாட்;டை எடுத்த நிலையில் இந்த விடயங்களை மையப்படுத்திவருகிறது செய்திவீச்சு,
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |