வெள்ளை வான் கடத்தல் விவகாரம் :ராஜிதவுக்கு நீதிமன்றம் விடுத்த உத்தரவு
முன்னாள் அமைச்சரும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான ராஜித சேனாரத்ன வெளிநாடு செல்ல விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது.
வெள்ளை வான்களில் ஆட்களை கடத்திச் சென்று முதலைகள் நிறைந்த ஏரியில் போட்டதாகத் தெரிவித்த அரச மருந்து சட்டமூலக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்னவுக்கு எதிரான வழக்கு தொடர்பில், ராஜித சேனாரத்ன வெளிநாடு செல்வதற்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டிருந்தது.
தடை நீக்கம்
இந்த நிலையியே கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி தமித் தோட்டவத்த இன்று (14) இந்த தடை உத்தரவை நீக்க உத்தரவிட்டுள்ளார்.

ராஜித சேனாரத்ன சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் விடுத்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிபதி, பயணத்தடை தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளதாக குடிவரவு அதிகாரிகளுக்கு அறிவிக்குமாறு நீதிமன்ற பதிவாளருக்கு உத்தரவிட்டார்.
சட்டத்தரணிகள் கோரிக்கை
இந்த வழக்கு பிரேரணை மூலம் அழைக்கப்பட்ட போது, ராஜித சேனாரத்னவுக்கு எதிராக விதிக்கப்பட்டுள்ள பயணத்தடையை தற்காலிகமாக நீக்குமாறு அவர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் கோரிக்கை விடுத்ததுடன், வழக்குத் தொடரில் முன்னிலையான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை .
