ராஜிதவின் பிடியாணை இடைநிறுத்த கோரிக்கை நிராகரிப்பு
தமக்கு எதிரான பிடியாணையை இடைநிறுத்தமாறு கோரி முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவினால் (Rajitha Senaratne) நகர்த்தல் பத்திரம் ஊடாக முன்வைக்கப்பட்ட கோரிக்கை கொழும்பு நீதவான் நீதிமன்றினால் நிராகரிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை கைதுசெய்யுமாறு கடந்த 12 ஆம் திகதி கொழும்பு மேலதிக நீதவானினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.
பிடியாணை
இந்த நிலையில் குறித்த பிடியாணையை தற்காலிகமாக ஒத்திவைப்பதற்கு உத்தரவொன்றை பிறப்பிக்குமாறு, தமது சட்டத்தரணி ஊடாக நேற்றைய தினம் நகர்த்தல் பத்திரம் ஊடாக ராஜித சேனாரத்ன கொழும்பு பிரதான நீதவானிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.
குறித்த கோரிக்கை, இன்றைய தினம் கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி ஜயதுங்கவினால் நிராகரிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, கிரிந்த மீன்பிடி துறைமுகம் தொடர்பில் கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழு முன்னெடுக்கும் விசாரணைக்கமைய, முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட பிடியாணை தொடர்ந்தும் நடைமுறையில் உள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் ஒருமுகத் திருவிழா


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 20 மணி நேரம் முன்
