வடக்கிலிருந்து கிழக்கு நோக்கி நகரும் பேரணி - முல்லைத்தீவு மக்கள் பேராதரவு (படங்கள்)
சிறிலங்காவின் 75 ஆவது சுதந்திர தினத்தை கரிநாளாக பிரகடனப்படுத்தி யாழ்ப்பணம் மற்றும் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் முன்னெடுத்துள்ள பேரணியில் அனைவரும் கட்சி பேதமின்றி கலந்துக்கொள்ள வேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இன்றைய இரண்டாம் நாள் பேரணி முல்லைத்தீவில் நிறைவடைந்துள்ளதுடன், முள்ளிவாய்க்காலில் உயிர்த்த நீத்த உறவுகளுக்கு தாய்மார் கண்ணீர் மல்க அஞ்சலிகளையும் செலுத்தியிருந்தனர்.
கண்ணீர் மல்க அஞ்சலி
சுதந்திர தினத்தை கரிநாளாக பிரகடனப்படுத்தி தமிழர்களுக்கான தீர்வுகளை வலியுறுத்தி யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திலிருந்து மட்டக்களப்பு நோக்கிய பேரணி நேற்றைய தினம் காவல்துறையினரின் கெடுபிடிகளுக்கு மத்தியில் ஆரம்பமானது.
தமிழர்களின் அடிப்படை உரிமைகளான தாயகம், தேசியம், சுயநிர்நணயம் என்பவற்றை வென்றெடுக்கும் நோக்கில் இந்த பேரணி இடம்பெற்று வருகின்றது.
நேற்று பல்கலைக்கழகத்தில் ஆரம்பமாகிய பேரணி, செம்மணியை அடைந்து அங்கிருந்து நாவற்குழி, சாவகச்சேரி, கொடிகாமம், மிருசுவில், பளை, ஆனையிறவு, பரந்தன் ஊடாக கிளிநொச்சியை சென்றடைந்து, முதலாம் நாள் உரிமைப் பேரணி இரணைமடுவில் நிறைவடைந்தது.
இரண்டாம் நாள் பேரணி
இந்த நிலையில் இன்றைய தினம் இரண்டாம் நாள் பேரணி காலை 9 மணிக்கு பரந்தனில் ஆரம்பமாகி புளியம்பொக்கணை, தர்மபுரம், விசுவமடு, உடையார்கட்டு, மூங்கிலாறு ஊடாக புதுக்குடியிருப்பை சென்றடைந்ததுடன், அங்கிருந்து முள்ளிவாய்க்கால் முற்றத்தை சென்றடைந்தது முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியில் சுடர ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதனையடுத்து முல்லைத்தீவில் இன்றைய இரண்டாம் நாள் பேரணி நிறைவடைந்தது.













தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

வள்ளுவம், உலகப் பொதுமறை என்ற கருத்தியல் நீக்கம்! 3 நாட்கள் முன்

ராகுல் Vs மோடி - பூகோள அரசியலின் இருமுனைவாக்க அரசியல்
5 நாட்கள் முன்