பூரண ஹர்த்தாலுடன் நாளை 9 மணிக்கு பேரணி ஆரம்பம்
வடகிழக்கு தழுவிய பூரண ஹர்த்தாலுடன் நாளை காலை 9 மணியளவில் யாழ். பல்கலைக்கழக முன்றலில் இருந்து மட்டக்களப்பு நோக்கிய பேரணி இடம்பெறவுள்ளதாக பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் மற்றும் சிவில் அமைப்புக்கள் தெரிவித்துள்ளன.
இந்தநிலையில், நாளை காலை வர்த்தக நிலையங்கள் ,போக்குவரத்து சேவையில் ஈடுபவோர், திரையரங்குகள் உட்பட்ட அனைத்து தரப்பினருக்கும் ஹர்த்தால் குறித்த அழைப்புக்கள் விடுக்கப்பட்டுள்ள நிலையில், அனைத்து தரப்புக்களும் ஆதரவு நல்கியுள்ள நிலையில் நாளைய தினம் பேரெழுச்சியாக தமது போராட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாக ஏற்பாட்டுக் குழு தெரிவித்துள்ளது.
கறுப்பு கொடி கட்டி ஆதரவு
வீடுகள், வர்த்தக நிலையங்கள் உட்பட அனைத்து இடங்களிலும் கறுப்பு கொடியினை கட்டி அனைத்து தரப்புக்களையும் போராட்டத்தில் கலந்து கொள்ளுமாறு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் மற்றும் சிவில் அமைப்புக்கள் அழைப்பு விடுத்துள்ளன.
கரிநாள் பேரணிக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி! எழுச்சி கொள்ளும் மட்டக்களப்பு (படங்கள்) |
கிழக்கிலங்கை இந்துக்குருமார் ஒன்றியம் முழுமையான ஆதரவு
வடகிழக்கில் தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள அடக்குமுறைகளுக்கு எதிராகவும் தமிழர்களுக்கான உரிமையினை வலியுறுத்தியும் பல்கலைக்கழக மாணவர்களினால் முன்னெடுக்கப்படும் கறுப்பு சுதந்திர தின போராட்டத்திற்கு முழுமையான ஆதரவு வழங்கப்படும் என கிழக்கிலங்கை இந்துக்குருமார் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
இந்தப் போராட்டத்திற்கு அனைத்து தமிழ் மக்களும் ஆதரவு வழங்கவேண்டியது தார்மீக கடமையென கிழக்கிலங்கை இந்துக்குருமார் ஒன்றியத்தின் தலைவர் சிவசிறி கணேச லோகநாதன் குருக்கள் தெரிவித்தார்.
இலங்கையின் 75ஆவது சுதந்திர தினம் என்பது தமிழ் மக்களுக்கு எந்த சுதந்திரத்தினையும் பெற்றுக்கொடுக்கவில்லையெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தமிழர் தாயகத்தின் எழுச்சிப் பேரணி - கிழக்கிலிருந்து விடுக்கப்பட்ட அழைப்பு (காணொளி) |
சாள்ஸ் நிர்மலநாதன்
இதேவேளை, பல்கலைக்கழக மாணவர்களின் பேரணிக்கு அனைத்து தமிழ் மக்களும் ஆதரவு வழங்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் கோரிக்கை விடுத்துள்ளார்.
சுதந்திர தின எழுச்சிப் பேரணிக்கு வலுச்சேர்க்க சிறீதரன் அழைப்பு |
தமிழர் தாயகத்தின் எழுச்சிப் பேரணி - வெளியாகிய வழித்தடம் |

