கெஹெலிய ரம்புக்வெல்லவின் மகனின் வீட்டில் பல சொத்துக்கள் திருட்டு!
முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மகனும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான ரமித் ரம்புக்வெல்லவின் வீட்டில் பல சொத்துக்கள் திருடப்பட்டுள்ளதாக முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது.
நாராஹேன்பிட்டி காவல் நிலையத்தில் இந்த முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தநிலையில்கொழும்பு நாராஹேன்பிட்டியில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் உள்ள வீட்டில் இந்த திருட்டு சம்பவம் பதிவாகியுள்ளது.
வீட்டு உபகரணங்கள்
குறித்த வீட்டிலிருந்து 4,275 அமெரிக்க டொலர்கள், 14 இலட்சம் இலங்கை ரூபா ரொக்கப் பணம் மற்றும் பல்வேறு வீட்டு உபகரணங்கள் இவ்வாறு திருடப்பட்டுள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதம் 08 ஆம் திகதிக்கும் செப்டம்பர் மாதம் 30 ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியிலேயே இந்தத் திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக முறைப்பாட்டில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ரமித் ரம்புக்வெல்லவின் முறைப்பாட்டின் அடிப்படையில் நாராஹேன்பிட்டி காவல்துறையினர் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணைகளில் குறித்த வீடு அவரது மனைவியின் தந்தைக்குச் சொந்தமானது எனத் தெரியவந்துள்ளது.
காவல்துறையினர் நடவடிக்கை
மனைவியின் தந்தையின் அறிவுறுத்தலுக்கு அமைய ரமித் ரம்புக்வெல்லவுக்குச் சொந்தமான பொருட்கள் மற்றும் சொத்துக்கள் நுேகொட பகுதியில் உள்ள சேமிப்புக் கிடங்கு (Warehouse) ஒன்றுக்கு மாற்றப்பட்டுள்ளதாக காவல்துறை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
வெளிநாட்டில் வசித்து வரும் ரமித் ரம்புக்வெல்லவின் மனைவியின் தந்தையும் இச்சம்பவம் தொடர்பில் மின்னஞ்சல் (E-mail) ஊடாகப் காவல்துறையினருக்கு முறைப்பாடு ஒன்றை அனுப்பியுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பான தகவல்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் நாராஹேன்பிட்டி காவல்துயைினர் மேலதிக விசாரணைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |