அர்ஜூன் மகேந்திரனுடன் பணியாற்றிய ரங்க திசநாயக்காவின் மனைவி
இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ரங்க திசநாயக்கவின் முதல் மற்றும் இரண்டாவது மனைவிகளும் மத்திய வங்கியில் பணியாற்றியதாக நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க தெரிவித்துள்ளார்.
இலங்கையில் மிகப்பெரிய மோசடியைச் செய்த அர்ஜுன் மகேந்திரன், மத்திய வங்கி ஆளுநரின் கீழ், அவரது இரண்டாவது மனைவி எந்தப் பதவியை வகித்தார் எனவும் எம்.பி. கேள்வி எழுப்புகிறார்.
அர்ஜுன் மகேந்திரன் நாட்டை விட்டு தப்பிச் செல்ல யார் அனுமதித்தது
2017 ஆம் ஆண்டு கோட்டை நீதவானாக ரங்கா திசாநாயக்க பணியாற்றியவேளை அர்ஜுன் மகேந்திரன் நாட்டை விட்டு தப்பிச் செல்லும் வகையில் அவரது கடவுச்சீட்டை யார் அனுமதித்தார்கள் என்பதை விளக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்துகிறார்.
அனைத்தையும் எதிர்கொள்ள தயார்
அடுத்த மாதம் தனக்கு ஒதுக்கப்பட்ட மூன்று வழக்குகளிலும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்றும், அவற்றை எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாகவும் சாமர சம்பத் தசநாயக்க கூறியுள்ளார்.
நேற்று (08) நாடாளுமன்றத்தில் உரையாற்றியபோது எம்.பி. இவ்வாறு கூறினார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
