திடீரென விமலை தொடர்பு கொண்டுள்ள ரணில்!
Ranil Wickremesinghe
Wimal Weerawansa
Sri Lankan Peoples
By Dilakshan
முன்னாள் ஜனாதிபதியும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்ரமசிங்கவிற்கும் தேசிய சுதந்திர முன்னணித் தலைவரும் முன்னாள் அமைச்சருமான விமல் வீரவன்சவிற்கும் இடையே ஒரு சிறப்பு தொலைபேசி உரையாடல் நடந்துள்ளது.
ரணில் விக்ரமசிங்க அநுராதபுரத்திலிருந்து கொழும்புக்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது 14 ஆம் திகதி பிற்பகல் இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
நாட்டின் அரசியல் நிலைமை
இந்த குறுகிய தொலைபேசி உரையாடலின் போது, தனிப்பட்ட விடயங்களுக்கு மேலதிகமாக, நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமை குறித்து இருவருக்கும் இடையே ஒரு சுருக்கமான கருத்துப் பரிமாற்றம் நடந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த காலம் முழுவதும் எதிரெதிர் அரசியல் கருத்துக்களைக் கொண்டிருந்த இந்த இரு தலைவர்களுக்கும் இடையிலான இந்த சுமுகமான உரையாடல் அரசியல் அரங்கில் மிகுந்த கவனத்தை ஈர்த்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்