துபாய்க்கு சென்று பாதாள உலகத்தவர்களை சந்தித்த ரணிலின் பிரதம தூதுவர் : வெளிவரும் அதிர்ச்சி தகவல்
CID - Sri Lanka Police
Ranil Wickremesinghe
Dubai
By Jaso
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தூதுக்குழுவில் பொறுப்புமிக்க பதவியில் இருந்த ஒருவர் துபாய்க்குச் சென்று, பாதாள உலகத்தைச் சேர்ந்த பல சக்திவாய்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர்களைச் சந்தித்ததாக கொழும்பு குற்றப்பிரிவுக்குத் தகவல் கிடைத்துள்ளதாக கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அசர்பைஜானில் கைது செய்யப்பட்ட பதுவத்த சமர, இதனை வெளிப்படுத்தியுள்ளார்.ரணில் விக்ரமசிங்கவின் பிரதம தூதுவர் என்று கூறப்படும் அந்த நபர், தன்னையும் சந்தித்ததாக பதுவத்த சமர கூறியுள்ளார்.
என்ன நோக்கத்திற்காக சந்தித்தார் - துருவும் சிஐடி
சம்பந்தப்பட்ட அந்த நபர் எந்த நோக்கத்திற்காக துபாய்க்குச் சென்று பல பாதாள உலகக் குற்றவாளிகளைச் சந்தித்தார் என்பதைத் தீர்மானிக்க விசாரணைகள் நடைபெற்று வருவதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
4ம் ஆண்டு நினைவஞ்சலி