உயிரிழந்த பிக்குகளுக்கு இரங்கல் தெரிவித்த முன்னாள் ஜனாதிபதிகள்!
மெல்சிறிபுர - நா உயன ஆரண்ய சேனாசனத்தில் நடந்த விபத்தில் உயிரிழந்த ஏழு பௌத்த பிக்குகளுக்கும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது இரங்கல்களை தெரிவித்துள்ளார்.
அறிவிப்பொன்றை வெளியிடுவதன் மூலம் அவர் தனது இரங்கல்களை இவ்வாறு தெரிவித்துள்ளார்.
விபத்தில் படுகாயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் பிக்குமார் விரைவில் குணமடைய பிரார்திப்பதாகவும் ரணில் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவும் தனது இரங்கல்களை தெரிவித்திருந்தார்.
ஆறு பிக்குகள் படுகாயம்
மெல்சிறிபுர - நா உயன ஆரண்ய சேனாசனத்தில் நேற்றிரவு (24) இடம்பெற்ற கேபிள் கார் விபத்தில் உயிரிழந்தவர்களில் ரஷ்ய பிக்கு ஒருவர், ருமேனிய பிக்கு ஒருவர் மற்றும் இந்திய பிக்கு ஒருவர் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விபத்து இடம்பெற்ற போது, கேபிள் காரில் பயணித்த 13 பிக்குகளில் இருவர் அதிலிருந்து குதித்து தப்பிய நிலையில், மேலும் ஆறு பிக்குகள் படுகாயமடைந்தனர்.
காயமடைந்த ஆறு பிக்குகளும் தற்போது குருணாகல் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
