இலத்திரனியல் அடையாள அட்டை விநியோகம் குறித்து வெளியான தகவல்
நாட்டில் இலத்திரனியல் அடையாள அட்டையை அறிமுகப்படுத்துவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன (Eranga Weeraratne) தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு இன்று (25) கருத்து வெளியிட்ட போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் எதிர்வரும் 2026 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் இலத்திரனியல் அடையாள அட்டை அறிமுகப்படுத்தப்படும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
நிகழ்நிலை மோசடிகள் கட்டுப்படுத்தப்படும்
இலத்திரனியல் அடையாள அட்டை, ஒரு நபரின் அடையாளத்தை சரிபார்ப்பதை எளிதாக்கும் என்றும் மரபணு தரவுகளைப் பாதுகாப்பாக சேமிக்கும் என்றும் பிரதி அமைச்சர் கூறியுள்ளார்.
இந்தத் திட்டத்தின் ஊடாக, அரச மற்றும் தனியார் நிறுவனங்களின் ஆவணச் சான்றிதழின் தேவையும் குறைவடையும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
இலத்திரனியல் அடையாள அட்டை நடைமுறைக்கு வந்ததன் பின்னர், நிகழ்நிலை மோசடிகள் கட்டுப்படுத்தப்படும் என எரங்க வீரரத்ன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
