சஜித்திற்கு அடுத்த ஆப்பு! இரண்டு வாரங்களுக்கு முன்னர் கோட்டாபய ரணில் போட்ட திட்டம்

Dr Rajitha Senaratne Gotabaya Rajapaksa Ranil Wickremesinghe Sajith Premadasa Sri Lankan political crisis
By S P Thas May 16, 2022 11:59 AM GMT
Report

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருக்கும் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவிற்கும் இடையிலான புரிந்துணர்வு இரண்டு வாரங்களுக்கு முன்னரே ஆரம்பிக்கப்பட்டதாகவும், சஜித் பிரேமதாசவிற்கு பிரதமர் பதவி வழங்கப்பட்டபோது அதை ஏற்க தாமதமாகிவிட்டார் என்ற குற்றச்சாட்டு தவறானது என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில் கொழும்பில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்தும் பேசிய அவர்,

பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளுடன் பகிரங்கமாக கலந்துரையாடி உரிய உடன்படிக்கைக்கு அமைய அமைச்சரவையை உருவாக்கினால் மக்கள் அமைச்சரவையை ஏற்றுக்கொள்வார்கள்.

இதுவரை கட்சிகளை அமைச்சரவையில் இணையுமாறு ரணில் அழைக்கவில்லை என்றாலும் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் தனித்தனியாக இரகசிய கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ளார்.

கட்சிகளுடன் சம்பிரதாயமான வெளிப்படையான கலந்துரையாடலுக்குப் பின்னர் முறையான உடன்படிக்கைக்கு அமைவாக அமைச்சரவை அமைக்கப்பட்டால்தான் அனைவரும் அதனை ஏற்றுக்கொள்வர். இப்போதும் அரசியல் கட்சிகளுடன் வெளிப்படையான உரையாடல்களை நடத்த முடியும்.

அதேவேளை, சரியான அரசாங்கத்தை அமைக்க முடியும் என்றார். இதேவேளை, முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கப்படவுள்ளதாக வெளியான தகவல்கள் தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்குப் பதில் வழங்கிய அவர், இந்த நடவடிக்கையும் சதித்திட்டத்தின் ஒரு அங்கமே நான் பார்க்கிறேன்.

இதற்கிடையில், சஜித் பிரேமதாசவிற்கு பிரதமர் பதவி வழங்கப்பட்டபோது அதை ஏற்க தாமதமாகிவிட்டார் என்ற குற்றச்சாட்டு தவறானது. ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருக்கும் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவிற்கும் இடையிலான புரிந்துணர்வு இரண்டு வாரங்களுக்கு முன்னரே ஆரம்பிக்கப்பட்டது என்றார்.

முன்னதாக சஜித் பிரேமதாசவை பிரதமர் பதவியை ஏற்குமாறு அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச அழைப்பு விடுத்த போதிலும், அதனை அவர் மறுத்திருந்தார். எனினும், ரணில் விக்ரமசிங்க தான் பதவியேற்கத் தயார் என்று அறிவித்ததன் பின்னர் சஜித் கோட்டாபயவிற்கு நிபந்தனை விதித்து தானும் தயாராக இருப்பதாக அறிவித்திருந்தார்.

இந்த நிலையில், பிரதமராக ரணில் பதவியேற்றதன் விளைவு, சஜித் அந்த வாய்ப்பை இழந்தார். அதேபோன்று தற்போதைய அரசியல் சூழலில் எதிர் கட்சி தலைவர் பதவியையும் அவர் இழக்கும் ஆபத்து ஏற்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

ReeCha
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016