ரணிலின் சட்டத்தரணி நீதிமன்றில் முன்வைத்த உருக்கமான கோரிக்கை!
புதிய இணைப்பு
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதய நோய், நீரிழிவு நோய் மற்றும் உயர் இரத்த அழுத்தம் உள்ளிட்ட பல உடல்நலப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக ரணில் விக்கிரமசிங்கவின் சட்டத்தரணி இன்று நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்டுள்ள ரணில் விக்ரமசிங்கவின் பிணை மனு கோட்டை நீதவான் நீதிமன்றில் பரிசீலிக்கப்பட்டு வருகின்ற நிலையில், இவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, அவரின் மனைவி புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவரைப் பராமரிக்க முன்னாள் ஜனாதிபதி மட்டுமே உள்ளார் என்றும் சட்டத்தரணி குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், தனது கட்சிக்காரரின் பிணை மனுவை பரிசீலிக்கும்போது இந்த சூழ்நிலைகளை கவனத்தில் எடுத்துக்கொள்ளுமாறு அவர் நீதிமன்றத்தை வலியுறுத்தியுள்ளார்.
முன்றாம் இணைப்பு
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமிங்கவுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருந்த நிலையில், தற்போது அது ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குற்றப் புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் குறித்த உத்தரவு பிறப்பக்கப்பட்டுள்ளது.
இந்த பிணை மனு கொழும்பு கோட்டை நீதவான் நிலுபுலி லங்காபுர முன்னிலையில் பரிசீலிக்கப்பட்டது. குற்றப் புலனாய்வுத் துறை சார்பாக முன்னிலையான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ், பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் இந்த சந்தேக நபருக்கு எதிராக சாட்சியங்களை முன்வைப்பதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
விசாரணை இன்னும் முடிவடையாததால், சந்தேக நபரை காவலில் வைக்குமாறும் அவர் கோரிக்கை விடுத்தார்.
இதன்படி சந்தேக நபர் சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி அனுஜ பிரேமரத்ன, நீதிமன்றத்தில் உண்மைகளை முன்வைத்து, சந்தேக நபரை பிணையில் விடுவிக்குமாறு கோரினார்.
இரண்டாம் இணைப்பு
கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமிங்கவுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அரச நிதியை தவறாக பயன்படுத்திய குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டு இன்று(22) கோட்டை நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டதையடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
எவ்வாறாயினும், இது தொடர்பான உத்தியோகபூர்வ தகவல் இதுவரை வெளியாகவில்லை
முதலாம் இணைப்பு
குற்றப் புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், அவர் விரைவில் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
முதலாம் இணைப்பு
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி ரணில், தனது பதவிக் காலத்தில் தனது மனைவி பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்கவின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக அரசாங்க நிதியைப் பயன்படுத்தி லண்டனுக்குச் சென்றது குறித்து குற்றப் புலனாய்வு திணைக்களம் விசாரணையைத் தொடங்கியிருந்தது.
இது தொடர்பான ஆதாரங்களை ஜூன் 24 அன்று குற்றப் புலனாய்வு திணைக்களம் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது.
அதைத் தொடர்ந்து, விசாரணை குறித்து முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தனிப்பட்ட செயலாளராகப் பணியாற்றிய சாண்ட்ரா பெரேரா மற்றும் முன்னாள் ஜனாதிபதி செயலாளர் சமன் ஏகநாயக்க ஆகியோரிடமிருந்து குற்றப் புலனாய்வுத் திணைக்களம் வாக்குமூலங்களைப் பதிவு செய்தது.
அதன்படி, விசாரணை தொடர்பாக வாக்குமூலங்களைப் வழங்குவதற்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டார்.
இந்த நிலையில், சுமார் நான்கரை மணி நேரம் வாக்குமூலம் பதிவு செய்த பின்னர் ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 4 நாட்கள் முன்
