ரணில் ராஜபக்சக்களின் மீட்பர்! - அனுரகுமார சீற்றம்(காணொளி)
ரணில் விக்கிரமசிங்க ராஜபக்சக்களின் மீட்பர் என்றும், விக்ரமசிங்கவை பிரதமராக நியமிப்பது மக்களின் விருப்பம் அல்ல என்றும்என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
இலங்கையின் பிரதமராக ரணில் விக்ரமசிங்கவை நியமித்ததாக கூறப்படும் நடவடிக்கை குறித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இணைந்து உருவாக்கும் சதியை பொதுமக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ரணில் கோட்டாபய ராஜபக்சவை நம்புகிறார், இவர்களின் சதிக்கு இந்த நாட்டில் உள்ள எந்தவொரு பிரஜையும் இம்முறை வீழ்ந்துவிடமாட்டார் என திஸாநாயக்க சுட்டிக்காட்டினார்.
රනිල් වික්රමසිංහ හැමදාමත් රාජපක්ෂ පවුලේ ගැලවුම්කාරයා. විසඳුම කියලා රනිල් සහ ගෝටාභය ඉදිරිපත් කරන දේ අපේ රටේ කවුද විශ්වාස කරන්නේ. රනිල්ට ගෝටාභය විශ්වාසයි, ගෝටාභයට රනිල් විශ්වාසයි. මේ රටේ කිසිදු පුරවැසියෙක් මේ මාලිගා කුමන්ත්රණ පිළිගන්නේ නැහැ. pic.twitter.com/rb6F5H53nr
— Anura Kumara Dissanayake (@anuradisanayake) May 12, 2022


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 3 நாட்கள் முன்
