ரணிலின் தேர்தல் தந்திரம்! அரசியல்வாதிகளிடையே நிலவும் பீதி

Ranil Wickremesinghe Sri Lanka Sri Lankan political crisis Go Home Ranil
By Pavan Apr 18, 2024 05:27 AM GMT
Report

"அதிபர் தேர்தல் நடத்தப்படாமல் தொடர்ந்தும் ரணில் விக்ரமசிங்க பதவியில் இருப்பதற்கான வியூகங்கள் வகுக்கப்படுகின்றவா என்ற சந்தேகம் மக்கள் மற்றும் அரசியல் கட்சிகளிடத்தில் ஏற்பட்டிருப்பதாக ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,

"இலங்கையின் அரசியல் சாசனத்தின்படி எதிர்வரும் செப்டெம்பர், ஒக்டோபர் மாதம் அளவில் அதிபர் தேர்தல் நடைபெற்று புதிய அதிபர் பொறுப்பேற்க வேண்டும்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை : சஜித்,அநுரவின் திட்டத்தை அம்பலப்படுத்திய கர்தினால்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை : சஜித்,அநுரவின் திட்டத்தை அம்பலப்படுத்திய கர்தினால்

புதிய தேர்தல் திகதி

இலங்கையின் தேர்தல் ஆணை குழுவும் புதிய தேர்தல் ஒன்று நடத்தப்பட வேண்டும் என்றும், அதற்கான திகதி மிக விரைவில் அறிவிக்கப்படும் என்றும் கூறி வருகின்றது.

இது இப்படி இருக்க அரசியல்வாதிகள் மத்தியிலும் பொதுமக்கள் மத்தியிலும் அதிபர் தேர்தல் ஒத்திவைக்கப்படும் என்ற அச்சம் தொற்றிக்கொண்டுள்ளது.

ரணிலின் தேர்தல் தந்திரம்! அரசியல்வாதிகளிடையே நிலவும் பீதி | Ranil Mster Mind President Elecsions

கடந்த காலங்களிலும் உள்ளூராட்சி சபைத் தேர்தலை அரசு தள்ளிவைத்திருக்கின்றது. மாகாண சபை தேர்தலில் புதிய தேர்தல் முறையொன்றைக் கொண்டு வருகின்றோம் என்று காரணம் கூறப்பட்டு காலவரையறையின்றி அந்த தேர்தலும் ஒத்திவைக்கப்பட்டிருக்கின்றது.

ரணிலின் தேர்தல் தந்திரம்! அரசியல்வாதிகளிடையே நிலவும் பீதி | Ranil Mster Mind President Elecsions

எதிர்க்கட்சி மதிக்கப்படவில்லை

மாகாண சபைகள், உள்ளூராட்சி சபைகள் என்பன அரசின் ஏஜன்டுகள் அல்லது அரசால் நியமிகப்பட்டவர்கள் எனப்படுவோரின் அதிகாரத்தின் கீழ் காணப்படுகின்றது.

உள்ளூராட்சி மன்றத்திலிருந்து மாகாண சபை மற்றும் நாடாளுமன்றம் வரையும் அரசின் செல்வாக்கு மேலோங்கி காணப்படுகின்றது. அரசு தான் நினைத்த விடயங்களைச் செய்கின்ற சூழ்நிலைதான் இன்று ஏற்பட்டிருக்கின்றது. எதிர்க்கட்சியோ அல்லது மக்களின் ஜனநாயக உரிமைகளோ மதிக்கப்படவில்லை.

ரணிலின் தேர்தல் தந்திரம்! அரசியல்வாதிகளிடையே நிலவும் பீதி | Ranil Mster Mind President Elecsions

மக்களால் தெரிவு செய்யப்பட்ட அமைப்புக்கள் உருவாக்கப்படவில்லை. அதிபர் தேர்தல் நடைபெறுவதற்கான காலம் நெருங்கிக் கொண்டிருக்கின்றது. ஆயினும், அந்த தேர்தல் நடைபெறுமா என்ற ஐயம் தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கின்றது.

எனவே, இன்னுமோர் அரகலய போராட்டம் தேவையா? அல்லது நாடு முழுவதும் மக்கள் எழுச்சியொன்று ஏற்பட வேண்டுமா? போன்ற கேள்விகளும் எழுந்து நிற்கின்றன.

மீண்டும் பாரிய எழுச்சி

அரசின் இவ்வாறான போக்குகள் மீண்டும் பாரிய எழுச்சியொன்றுக்கு வழிவகுக்கலாம். இவ்வாறான எழுச்சிகள் பொருளாதாரக் கொள்கைகள், திட்டங்கள் என்பவை பின்தள்ளி போவதற்கான சூழ்நிலையையும் ஏற்படுத்தும்.

ரணிலின் தேர்தல் தந்திரம்! அரசியல்வாதிகளிடையே நிலவும் பீதி | Ranil Mster Mind President Elecsions

ஜனநாயகத்தை மதித்து மக்களின் வாக்குரிமைகளை மதித்து அதிபர் தேர்தல் குறிப்பிடப்படும் திகதியில் குறிப்பிடப்படும் காலத்தில் நடத்தப்பட வேண்டும் என ஒட்டுமொத்த மக்களும் விரும்புகின்றனர்.

தேர்தல்களை காலவரையறையின்றி ஒத்திவைப்பதை விடுத்து மக்களை மதித்து தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும் என்பது எமது நிலைப்பாடாகும்." எனக் குறிப்பிட்டுள்ளார்.

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள். 
ReeCha
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கோண்டாவில் மேற்கு, வெள்ளவத்தை

02 Sep, 2022
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016