மீண்டும் தலைதூக்கும் இராணுவம்! களமிறக்க உத்தரவிட்ட ரணில்
இராணுவம்
இலங்கையில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதற்காகவென தெரிவித்து மீண்டும் சிறிலங்கா இராணுவத்தினர் களமிறக்கப்பட்டுள்ளனர்.
அதிபர் ரணில் விக்ரம சிங்கவினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின் ஊடாக இந்த அறிவிப்பு நடைமுறைக்கு வந்துள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரம சிங்கவினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின் ஊடாக, சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதற்காக மீண்டும் இராணுவத்தினர் களமிறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி நேற்று வியாழக்கிழமை முதல் நடைமுறைக்கு வரும் வகையில் நாட்டின் பொது ஒழுங்கைப் பேணுவதற்காக அனைத்து ஆயுதப்படை உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுதற்காகவென தெரிவித்து கடந்த சில மாதங்களாக ஒவ்வொரு மாதமும் பாதுகாப்புப் படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இது பற்றிய விரிவான செய்திகளையும் மேலும் பல முக்கிய செய்திகளையும் தெரிந்து கொள்ள எமது காலை நேர முக்கிய செய்திகளுடன் இணைந்திருங்கள்,
