மியன்மாரை உலுக்கிய நில நடுக்கம்: அநுர அரசிடம் ரணில் விடுத்துள்ள கோரிக்கை
மியன்மாரில் (Myanmar) ஏற்பட்ட நிலநடுக்கத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்க இராணுவம் உட்பட மருத்துவக் குழுவை அந்நாட்டுக்கு அனுப்புமாறு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் இது தொடர்பில் அறிக்கை ஒன்றை விடுத்து குறித்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
இது தொடர்பில் அவரது அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது, “கடந்த 2015ஆம் ஆண்டு நேபாளத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டபோது, நாங்கள் இராணுவக் குழுவை அனுப்பினோம்.
நிவாரண உதவி
இந்தியாவிற்குப் பிறகு இலங்கை இரண்டாவது பெரிய நன்கொடையாளராக இருந்தது.
இன்று, இந்தியா, தாய்லாந்து, மலேசியா, சீனா மற்றும் அவுஸ்திரேலியா கூட மியான்மருக்கு உதவிகளை அனுப்பியுள்ளன. அதனால் நாமும் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அந்த வகையில், இராணுவ மருத்துவப் படையைச் சேர்ந்த மருத்துவர்கள் உட்பட ஒரு குழுவை உடனடியாக மியன்மாருக்கு அனுப்பி, அவர்களுக்கு உபகரணங்களை வழங்கி, மியன்மாரில் ஒரு தற்காலிக மருத்துவமனையை அமைக்க வேண்டும் என்பதே எனது முன்மொழிவு” என அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


பிரிட்டனின் தடை… சிறிலங்காவுக்கு அடுத்த நெருக்கடியா… 1 வாரம் முன்
