பதவி என்னை தேடி வந்ததே தவிர நான் பதவியைத் தேடிச் செல்லவில்லை : ரணில் பெருமிதம்
நாடு நெருக்கடியில் சிக்கித் தவித்த 2022 ஆம் ஆண்டில் பிரதமர் பதவியையோ அல்லது அதிபர் பதவியையோ பெறும் ஆசை எனக்கு இருக்கவில்லையெனவும் அந்த ஆண்டில் அந்தப் பதவிகள் என்னைத் தேடி வந்தன என்பதுதான் உண்மையென அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
குளியாப்பிட்டிய மாநகர சபை மைதானத்தில் நேற்று (10) நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் முதலாவது பொதுக் கூட்டத்தில் உரையாற்றும்போதே ரணில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து ரணில் மேலும் தெரிவிக்கையில், “நான் அரசைப் பொறுப்பேற்ற போது, நாட்டை இந்த நிலைக்கு கொண்டு வர முடியும் என நான் எதிர்பார்க்கவில்லை.
பொதுக் கூட்டம்
இன்று நாம் வங்குரோத்து நிலையில் இருந்து விடுவிக்கப்பட உள்ள நிலையில் இதற்கு குறைந்தது ஐந்து வருடங்கள் ஆகும் என்று பலர் நினைத்தார்கள்.
மேலும் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் இங்கு வந்துள்ள நிலையில் அவர்களுடனும் உத்தியோகபூர்வ கடன் வழங்கிய நாடுகளுடனும் பேச்சு நடத்தி மே அல்லது ஜூன் மாதத்தில் முதல் ஒப்பந்தத்தில் கையெழுத்திட எதிர்பாரக்கிறோம்.
அதன் பிறகு, வங்குரோத்தற்ற நாடாக சலுகைகளைப் பெற முடிவதுடன் இந்தப் பயணத்தில் மக்களுக்கு நிவாரணம் வழங்க முடிந்தது.
அத்துடன் இந்த ஆண்டு அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க முடிந்துள்ளதுடன் மேலும் அஸ்வெசும திட்டத்தின் கீழ் சமுர்த்தியை விட மூன்று மடங்கு நன்மைகள் வழங்கப்படுவதோடு எதிர்காலத்தில் 24 இலட்சம் பேருக்கு அந்த நன்மைகள் கிடைக்கும்.
நாடாளுமன்றக் குழு
மேலும், காணி அனுமதிப் பத்திரம் உள்ள அனைவருக்கும் நிரந்தர காணி உரித்து வழங்க நடவடிக்கை எடுத்து வருவதுடன் கொழும்பில் 50 ஆயிரம் அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிக்கும் மக்களுக்கு சட்டபூர்வ உரிமைகள் வழங்கப்படும்.
அத்தோடு இலஞ்சம் மற்றும் ஊழலுக்கு எதிரான ஆணைக்குழுவை உருவாக்கியுள்ளதுடன் மேலும் நாடாளுமன்றக் குழுக்கள் நியமிக்கப்பட்டன.
பெண்களுக்கு அதிகாரமளிக்கும் சட்டமூலம் மற்றும் பாலின சமத்துவ சட்டமூலம் ஆகியவற்றை கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மேலும், பொதுஜன பெரமுன பின்வரிசை அமைச்சர்கள் என்னைச் சந்தித்து அதிபர் பதவியை ஏற்குமாறு அழைப்பு விடுத்த நிலையில் நான் பிரதமராக பதவியேற்றதுடன் இதை ஏற்றுக்கொள்ள வேறு யாரும் முன்வரவில்லை.
பதவி நீக்கம்
மொட்டுக் கட்சி ஏற்க முடியாததுடன் சஜித் மற்றும் அனுர ஏற்றுக்கொள்ள முன்வராததுடன் மேலும், சம்பந்தன் உடல்நிலை சரியில்லாமல் இருந்ததால் அவரால் அதை ஏற்க முடியாதமையினால் பிரதமர் பதவியை நான் ஏற்றேன்.
நிதி அமைச்சர் என்ற முறையில் சர்வதேச நாணய நிதியத்திடம் பேசியமையால் அதன் ஆதரவு கிடைத்ததுடன் இந்த நிலையில்தான் 2022 ஜூலை ஒன்பதாம் திகதி நடந்த எதிர்ப்பு முன்னாள் அதிபரை பதவி நீக்க நடந்ததா அல்லது என்னைப் பதவி நீக்க நடந்ததா என்று தெரியவில்லை.
எவ்வாறாயினும், அதிபர் மாளிகை சுற்றிவளைக்கப்பட்டபோது முன்னாள் அதிபர் பதவியை விட்டு வெளியேறியதுடன் எனது வீட்டுக்குத் தீ வைக்கப்பட்டடு இருப்பினும் முன்னாள் அதிபர் வழங்கிய பொறுப்பை நான் ஏற்றுக்கொண்டேன்.
நான் அரச கட்டடமொன்றில் பதில் அதிபராகப் பதவிப் பிரமாணம் செய்வதற்கு அரச அதிகாரிகள் அஞ்சினாலும் கூட விகாரையில் நான் பதில் அதிபராக பதவியேற்றதுடன் பதவி என்னைத் தேடி வந்தது” என அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |