அம்பலமானது ரணிலின் ரகசிய ஒப்பந்தம்! திரை மறைவில் நடந்த காய் நகர்த்தல்கள்

Parliament of Sri Lanka Gotabaya Rajapaksa Ranil Wickremesinghe Sri Lankan political crisis
By Kiruththikan May 23, 2022 09:45 AM GMT
Report

இரகசிய ஒப்பந்தத்தின் மூலமே இடைக்கால அரசாங்கத்தினை பிரதமர் ரணில் அமைத்துள்ளதாகவும், இந்த ஆட்சியை ஒரு மாத காலத்திற்கு கூட கொண்டு செல்ல முடியாது எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

மேலும், பிரதி சபாநாயகர் விவகாரத்திலேயே உண்மையான ரணில் விக்ரமசிங்கவின் சுயரூபம் வெளிப்படுத்தப்பட்டது எனவும் ராஜித சேனாரத்ன குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்தும் அவர் குறிப்பிடுகையில்,

 "பிரதமர் ரணில் விக்ரமசிங்க இரகசிய ஒப்பந்தத்தின் ஊடாகவே இடைக்கால அரசாங்கத்தை அமைத்துள்ளார். அவர் ராஜபக்ச குடும்பத்தை பாதுகாப்பதற்காக அன்றி நாட்டு மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக ஒருபோதும் செயற்பட மாட்டார். கோட்டாபய ராஜபக்சவினால் எமக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்த கடிதத்தில் கட்சி சாரா அரசாங்கத்தில் பங்கேற்குமாறு குறிப்பிடப்பட்டிருந்தது.

நாடாளுமன்ற உறுப்பினர்களை உள்ளடக்கிய அரசாங்கம் எவ்வாறு கட்சி சாராததாக அமையும்? அவ்வாறெனில் சகல துறைசார் நிபுணர்கள் அழைக்கப்பட்டு அவர்களை உள்ளடக்கிய ஆட்சியொன்று அமைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் ரணில் விக்ரமசிங்க ஏனைய கட்சிகளிலுள்ள உறுப்பினர்களை இரகசியமாக அழைத்து திருட்டு அரசாங்கத்தையே அமைத்துள்ளார்.

அம்பலமானது ரணிலின் ரகசிய ஒப்பந்தம்! திரை மறைவில் நடந்த காய் நகர்த்தல்கள் | Ranil S Secret Deal Information Released

அதன் காரணமாகவே அவருக்கு முன்னோக்கிச் செல்ல முடியாத நிலைமை காணப்படுகிறது. ரணில் விக்ரமசிங்க பதவியேற்றதன் பின்னர் இதுவரையில் ஒரு டொலரைக் கூட பெற்றுக் கொள்ளவில்லை. பிரதி சபாநாயகர் விவகாரத்தில் அவர் முன்வைத்த கோரிக்கைக்கு அமைய ரோஹிணி கவிரத்னவை நாம் வேட்பாளராக நியமித்தோம். இறுதி நாள் வரை அவரை ஏகமனதான தெரிவு செய்யும் தீர்மானமே காணப்பட்டது.

எவ்வாறிருப்பினும் அன்றைய தினம் பசில் ராஜபக்ச பொதுஜன பெரமுனவினரை அழைத்து அஜித் ராஜபக்சவை வேட்பாளராக்கி ரணிலின் கோரிக்கைக்கு முற்றுபுள்ளி வைத்து , அவரின் கொள்கையையும் கேள்விக்குறியாக்கினார்.

பெண் பிரதிநிதியை வேட்பாளராக நியமிக்க வேண்டும் என்று யோசனை முன்வைத்த ரணிலே அதற்கு முரணாக செயற்பட்டார். இதிலிருந்தே அவரது சுயரூபம் வெளிப்படுத்தப்பட்டது.

அம்பலமானது ரணிலின் ரகசிய ஒப்பந்தம்! திரை மறைவில் நடந்த காய் நகர்த்தல்கள் | Ranil S Secret Deal Information Released

19 ஆவது திருத்தம் மீள நடைமுறைப்படுத்தப்பட்டால் இரட்டை பிரஜாவுரிமையுடையோரது நாடாளுமன்ற உறுப்புரிமை இரத்தாகும். எனவே பசில் ராஜபக்சவின் நாடாளுமன்ற உறுப்புரிமையும் தானாகவே நீங்கும். ஆனால் அவர் அதற்கு இடமளிக்கமாட்டார்.

இந்த விடயத்தில் ரணிலின் நகர்வு எவ்வாறு அமையப்போகிறது? இவ்வாறான கொள்கை மாறுபாட்டுடன் இந்த இடைக்கால அரசாங்கத்தினால் இன்னும் ஒரு மாதம் கூட ஆட்சி செய்ய முடியாது. பின்வாசல் வழியாக நாடாளுமன்றத்திற்குள் நுழைந்த ரணில் விக்ரமசிங்க, அதே பின்வாசல் வழியாகவே பிரதமராகவும் ஆகியுள்ளார். இவரால் நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது" என தெரிவித்துள்ளார்.  

ReeCha
மரண அறிவித்தல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மாத்தளை, கொழும்பு

15 Jul, 2026
மரண அறிவித்தல்

சங்குவேலி, கொழும்பு, Toronto, Canada

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொழும்பு

13 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
அகாலமரணம்
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, பரிஸ், France, London, United Kingdom

10 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Mississauga, Canada, வெள்ளவத்தை கொழும்பு

16 Jun, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

16 Jul, 2001
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Limburg, Germany

12 Jul, 2021
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை மேற்கு, கொழும்பு, தங்காலை, London, United Kingdom

02 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், உடுப்பிட்டி

15 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

14 Jul, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025