13 ஆவது திருத்தம் - தருணம் பார்த்து காத்திருக்கும் சம்பந்தன்
அதிபர் ரணில் விக்ரமசிங்க 13 ஆவது திருத்தச் சட்டம் குறித்து நேற்று(9)ஆற்றிய விசேட உரையை முழுமையாகக் கேட்டேன். ஆனால், அவரின் உரை தொடர்பில் அவசரப்பட்டு பதிலளிக்க விரும்பவில்லை. உரிய நேரத்தில் பதில் வழங்குவேன்." என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுத் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
அதிபரின் விசேட உரை தொடர்பில் கருத்து தெரிவிக்கையில் அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
13ஆவது அரசமைப்புத் திருத்தம் மற்றும் அதிகாரப் பகிர்வு இந்த நாட்டின் அதியுயர் சட்டமாகும். அதை நாம் புறக்கணிக்க முடியாது.
அரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டம் மற்றும் அதிகாரப் பகிர்வு தொடர்பில் எமது உறுதியான நிலைப்பாட்டை அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் இந்திய விஜயத்துக்குப் பின்னர் அவர் தலைமையில் நடைபெற்ற சர்வகட்சிக் கூட்டத்திலும், இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு நாம் எழுதிய கடிதத்திலும் தெளிவாகத் தெரிவித்துள்ளோம் என அவர் கூறியுள்ளார்.
இதன்விரிவான மற்றும் பல தகவல்களை மதிய நேர செய்திகளின் தொகுப்பில் காண்க,