மற்றுமோர் வெளிநாட்டு பயணத்திற்காக தயராகும் ரணில்..!
ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேவின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்வதற்காக அதிபர் ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் செப்டெம்பர் 26 ஆம் திகதி ஜப்பான் செல்லவுள்ளார்.
ரணில் விக்ரமசிங்கவின் இந்த விஜயத்தின் போது ஜப்பானிய பிரதமர் புமியோ கிஷிடா மற்றும் ஜப்பானிய அரசாங்கத்தின் உயர்மட்ட பிரதிநிதிகளை அவர் சந்திக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆசிய அபிவிருத்தி வங்கி
ஜப்பானுக்கான விஜயத்தின் பின்னர் பிலிப்பைன்ஸின் மணிலா நகருக்குச் செல்லும் அதிபர் அங்கு பிலிப்பைன்ஸ் அதிபர் பெர்டினாண்ட் மார்கோஸ் ஜூனியரைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
பிலிப்பைன்ஸ் விஜயத்தின் போது செப்டெம்பர் 29 ஆம் திகதி இடம்பெறவுள்ள ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிகழ்விலும் ரணில் விக்ரமசிங்கபங்கேற்க உள்ளார்.
இதேவேளை, அதிபர் ரணில் விக்ரமசிங்க பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதி சண்டங்கில் பங்கேற்பதற்காத பிரித்தானியா சென்று நேற்று முன்தினம் நாடு திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.


உலகில் பெண் விடுதலையை சாத்தியப்படுத்திய தலைவர் பிரபாகரன்… 3 நாட்கள் முன்

நெருக்கடி நிலைமைகளும் மலையகத் தமிழர்களும்
1 வாரம் முன்