கடும் விமர்சனங்களுக்கு மத்தியில் மீண்டும் வெளிநாடு பறக்கிறார் ரணில்..!
அதிபர் ரணில்ஆட்சிக்கு வந்து 17 மாதங்களில் 18 தடவைகள் வெளிநாடு சென்றுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் ஜே.வி.பி தலைவர் அநுரகுமார திஸாநாயக்க ஆகியோர் நாடாளுமன்றத்திலும் வெளியிலும் கடும் விமர்சனங்களை முன்வைத்திருந்தனர்.
அத்துடன் அந்த செலவுகள் மற்றும் ஏனைய செலவுகளுக்காக வரவு செலவு திட்டத்தில் ஒதுக்கப்பட்ட தொகைக்கு மேலதிகமாக மேலும் 2000 இலட்சம் ரூபாவை அதிபர் ரணில் ஒதுக்கியுள்ளதாக அநுரகுமார மற்றுமொரு மற்றுமொரு குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார்.
சஜித்,அநுரகுமார குற்றச்சாட்டு
நாடாளுமன்றத்தில் அவர்கள் இதனைத் தெரிவிக்கையில், ரணில் சுவிட்சர்லாந்து மற்றும் உகண்டா விஜயங்களில் இருந்தார்.
இந்த நிலையில் அதிபர் ரணில் 19வது வெளிநாட்டு விஜயத்தை மேற்கொள்ளவுள்ளதாக கொழும்பு ஊடகமொன்று தெரிவித்துள்ளது.
19வது வெளிநாட்டு விஜயமாக அவுஸ்திரேலியா
இதன்படி அதிபர் தனது 19வது வெளிநாட்டு விஜயமாக அவுஸ்திரேலியாவை தெரிவு செய்துள்ளார்.
அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரில் காலநிலை மாற்றம் தொடர்பான மாநாடு எதிர்வரும் பெப்ரவரி மாதம் 9ஆம் திகதி நடைபெறவுள்ளதுடன், அதில் பங்கேற்க அதிபர் தீர்மானித்துள்ளார் என அந்த ஊடகம் தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |