இராணுவ தளபதிக்கு ரணில் தரப்பு கொடுத்துள்ள பதிலடி
கொவிட் கட்டுப்படுத்தல் தொடர்பாக ரணில் தெரிவித்த கருத்தை விளங்கிக்கொள்ளாமலேயே இராணுவ தளபதி பேசி இருக்கின்றார். அவரின் கருத்து சிறுபிள்ளைத்தனமானது இது தொடர்பில் கவலையடைகின்றோம் என ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்த்தன தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் தெரிவித்துள்ளதாவது,
இராணுவ தளபதி சவேந்திர சில்வாவின் சிறுபிள்ளைத்தனமான பேச்சு தொடர்பில் கவலையடைகின்றோம். ஏனெனில் தலைவர் ரணில் விக்ரமசிங்க இராணுவ தளபதி தொடர்பாகவோ இராணுவத்தினரின் நடவடிக்கைகள் தொடர்பாகவோ விமர்சிக்கவில்லை.
அதேபோன்று தடுப்பூசி ஏற்றுவது தொடர்பாகவோ தடுப்பூசி ஏற்றும் இடம் தொடர்பாகவோ கதைக்கவில்லை. இதனை புரிந்துகொள்ளாமலேயே இராணுவ தளபதி இவ்வாறு செயற்பட்டிருக்கின்றார் எனத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் இன்றைய மதியநேர செய்திகளின் தொகுப்பு
செஞ்சோலையில் 53 மாணவிகளை பலியெடுத்த கொடூரத்தை மறக்கத்தான் முடியுமா? 7 மணி நேரம் முன்