ரஞ்சனின் மனுவை நிராகரித்தது உயர் நீதிமன்றம்
ranjan ramanayake
SRILANKa
By Vasanth
நீதிமன்றை அவமதித்த குற்றச்சாட்டில் நான்கு வருட கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட தனக்கு எதிரான வழக்கை மீண்டும் ஐந்து பேர் கொண்ட நீதிபதி குழாம் முன்னிலையில் விசாரிக்கக் கோரி ரஞ்சன் ராமநாயக்க தாக்கல் செய்த மனுவை உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டு தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பை மீள்பரிசீலனை செய்யுமாறு கோரியே மனு தாக்கல் செய்யப்பட்டது.
குறித்த வழக்கானது நீதிபதி சிசிர டி ஆக்ருப், நீதிபதி விஜித் மலல்கொட மற்றும் நீதிபதி பிரதீப் பத்மன் சூரசேன ஆகிய மூவர் அடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் அவர்கள் இந்த மனுவை நிராகரித்துள்ளனர்.