சிறையிலுள்ள ரஞ்சன் ராமநாயக்க விடுதலை! எதிர்க்கட்சித் தலைவர் வெளியிட்ட பதிவு
Sajith Premadasa
SJB
Ranjan Ramanayake
SriLanka
By Chanakyan
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் விடுதலை தொடர்பில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ கருத்து வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
"இலங்கை தேசிய சிறைக்கைதிகள் தினம் செப்டம்பர் 12 ஆகும்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷவிடம் எங்கள் அன்புமிக்கவரும், பிரபல நடிகரும் மக்கள் சார்பு அரசியல்வாதியுமான ரஞ்சன் ராமநாயக்கவை அன்றைய தினம் ஜனாதிபதி மன்னிப்பு வழங்கி அவரை விடுதலை செய்வார் என எதிர்பார்க்கின்றேன் என அவர் அந்த செய்தியில் பதிவிட்டுள்ளார்.