துப்பாக்கியுடன் கைதான ரெப் இசை கலைஞர்: நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்ட இலங்கையின் ரெப் இசை கலைஞர் ஷான் புத்தா உட்பட மூவரை 7 நாட்களுக்குத் தடுப்பு காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மாத்தறை பிரதம நீதவான் அருண புத்ததாச முன்னிலையில் சந்தேகநபர்களை முன்னிலைப்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், மீகொடை அரலிய உயன பகுதியில் குறித்த ரெப் இசைக் கலைஞர் 9 மில்லி மீட்டர் துப்பாக்கியுடன் நேற்று(14) கைது செய்யப்பட்டுள்ளார்.
நீதிமன்ற உத்தரவு
அத்துடன், பாடகருக்கு துப்பாக்கி வழங்கியதாகக் கூறப்படும் மன்னார் காவல் நிலையத்தில் பணியாற்றும் கான்ஸ்டபிள் ஒருவரும் குறித்த பாடகரின் முகாமையாளரும் இதன்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபரான கான்ஸ்டபிள் மாத்தறை, கொட்டவில காவல் நிலையத்தில் கடமையாற்றிய போது துப்பாக்கியைத் திருடி பாடகரிடம் கொடுத்ததாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை மாத்தறை பிரதம நீதவானிடம் முன்னிலைப்படுத்தியதை அடுத்து தடுப்பு காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


நெருக்கடி நிலைமைகளும் மலையகத் தமிழர்களும்
1 வாரம் முன்