மாணவி வன்புணர்வு : பாடசாலை வான் சாரதி தலைமறைவு
எம்பிலிப்பிட்டிய அரச பாடசாலையில் 11ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவியை வன்புணர்விற்கு உட்படுத்திய பாடசாலை வான் சாரதியை கண்டுபிடிக்க பனாமுர காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
குறித்த மாணவி நேற்று பாடசாலைக்கு வராமல் சீருடையில் எம்பிலிப்பிட்டிய நகரில் தனது நண்பர்களுடன் காணப்பட்டதாக பாடசாலைக்கு கிடைத்த அழைப்பின் பிரகாரம் சிறுமியின் உறவினர்கள் எம்பிலிபிட்டிய தலைமையக காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
சாரதியை வரவழைத்து அவரிடம் வாக்குமூலம்
அதன்படி சிறுமி பாடசாலைக்கு வந்து கொண்டிருந்த வானின் சாரதியை வரவழைத்து அவரிடம் வாக்குமூலம் பெற்ற காவல்துறையினர், புத்தகங்களை வாங்கித் தருவதாக கூறி எம்பிலிப்பிட்டிய நகரில் வானில் இருந்து இறங்கியதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

அவரது வாக்குமூலத்தில் சந்தேகமடைந்த சிறுமியின் உறவினர்கள், சிறுமியை கண்டுபிடிக்கும் வரை சாரதியை விடுவிக்க வேண்டாம் என கோரிக்கை விடுத்த போதிலும், காவல்துறையினர் அவரை விடுவித்துள்ளனர்.
காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்ற சாரதி
எனினும், மதியம் வீட்டிற்கு வந்த மாணவி, எம்பிலிபிட்டியவில் இருந்து சில புத்தகங்களை வாங்கிய பின்னர், சாரதி தன்னை வானில் ஏற்றி சந்திரிகா ஏரிக்கு அருகிலுள்ள காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்றதாக கூறினார்.

இதற்கிடையில், காவல்துறையிடமிருந்து அழைப்பு வந்ததையடுத்து, அவர் தன்னை அங்கேயே விட்டுவிட்டு சென்றதாக சிறுமி கூறினார்.
பின்னர் அவர் எம்பிலிபிட்டிய மாவட்ட பொது வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியிடம் முற்படுத்தப்பட்டார். குறித்த வானை காவல்துறையினர் கைப்பற்றிய போதிலும், திருமணமான 42 வயதுடைய சந்தேக நபரான சாரதி பிரதேசத்தை விட்டுத் தப்பிச் சென்றுள்ளதுடன், அவரைக் கண்டுபிடிப்பதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |
அன்னை பூபதி! ஈழ நிலத்தின் அன்னையர்களின் குறியீடு
5 நாட்கள் முன்