தடுத்துவைக்கப்பட்டுள்ள எழுத்தாளர் தீபச்செல்வனின் நூல்கள்: கிளிநொச்சியில் நீதிகோரல் ஆர்ப்பாட்டம்
சுங்கத்திணைக்களத்தினால் தடுத்து வைக்கப்பட்டுள்ள கவிஞர் தீபச்செல்வன் உள்ளிட்ட எழுத்தாளர்களின் நூலை விடுவிக்க வலியுறுத்தி எதிர்வரும் 26ம் திகதி ஞாயிற்றுக்கிழமை கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.
உலக தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் இலங்கை கிளை தலைவர் அ.சத்தியானந்தனால் இன்று(24.04.2026) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு அனைவரையும் ஒன்றிணையுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
சிங்கள எழுத்தாளர்களின் குரல்
தொடர்ந்து தெரிவிக்கையில்
“ஈழத்திலும் சரி புலம்பெயர் தேசங்களிலும் நன்கு அறியப்பட்ட ஒரு எழுத்தாளராக விளங்கும் தீபச்செல்வனின் நூலினை பாதுகாப்பு அமைச்சும் சுங்கத்திணைக்களமும் சேர்ந்து தடுத்து வைத்திருக்கின்றது.

சிங்கள எழுத்தாளர்கள் மத்தியில் கூட இவரின் ஆக்கங்கள் வாசிக்கப்பட்டு மொழிபெயர்ப்பு கூட செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறான ஒரு எழுத்தாளரின் நூலானது தடுத்து வைக்கப்பட்டிருக்கின்ற நிலையில் சிங்கள எழுத்தாளர்களும் குரல் கொடுத்து வருகின்றனர்.
கடந்த வாரம் கலாசார அலுவல்கள் அமைச்சில் விடுவிப்பது தொடர்பாக கலந்துரையாடல் இடம்பெற்றிருந்த நிலையில் அதில் விடுவிப்பது தொடர்பாக ஒரு தீர்வும் எட்டப்படவில்லை.
எனவே குறித்த நூலை உடனடியாக விடுவிக்க வலியுறுத்தி ஏற்பாடு செய்யப்பட்டுள்ள போராட்டத்திற்கு அனைவரையும் ஆதரவு வழங்கு மாறு அழைப்பு விடுக்கப்படுகிறது” என்றார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |