மத்திய கிழக்கு அமைதிக்கு சீனா முன்முரம்! வெளிப்பபடுத்தும் பாகிஸ்தான்
மத்திய கிழக்கில் அமைதியை நிலைநாட்ட சீனா மிகவும் ஆக்கபூர்வமான மற்றும் கொள்கை ரீதியான பங்களிப்பை வழங்கி வருவதாகப் பாகிஸ்தான் செனட்டர் முஷாஹித் ஹுசைன் சையத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், “மத்திய கிழக்கு விவகாரத்தில் சீனாவும் பாகிஸ்தானும் ஒரே நிலைப்பாட்டைக் கொண்டுள்ளன.
அமைதி, நல்லிணக்கம் மற்றும் சகவாழ்வு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட ஐந்து அம்சத் திட்டத்தை இரு நாடுகளும் ஏற்கனவே முன்வைத்துள்ளன.இதன் மூலம் இரு நாடுகளும் இப்பிராந்தியப் பிரச்சினைகளை அமைதி வழியில் அணுகுவதை உறுதி செய்துள்ளன.
சீனாவின் நோக்கம்
ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் ஒருதலைப்பட்சமான தீர்மானத்தை சீனா தனது வீட்டோ (Veto) அதிகாரத்தைப் பயன்படுத்தித் தடுத்ததன் மூலம், அது நடுநிலையான மற்றும் நீதியான முறையில் செயல்படுவதை நிரூபித்துள்ளது.

மேலும், ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபி இளவரசர் காலித் மற்றும் சவுதி அரேபியாவின் இளவரசர் முகமது பின் சல்மான் ஆகியோருடன் சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் நடத்திய பேச்சுவார்த்தைகள் சீனாவின் ஈடுபாட்டை வெளிப்படுத்துகின்றன.
ஈரான் விவகாரத்திலும் சீனா தொடர்ந்து தகவல் தொடர்புகளைப் பேணி வருகிறது. நேரடியாகவும் மறைமுகமாகவும் சீனா மேற்கொண்டு வரும் இந்த இராஜதந்திர முயற்சிகளின் ஒரே நோக்கம், மோதலில் ஈடுபட்டுள்ள தரப்பினரிடையே அமைதியை ஏற்படுத்துவதுதான்.இந்த உன்னத நோக்கத்தில் சீனாவும் பாகிஸ்தானும் அர்ப்பணிப்புடன் செயல்படுகின்றன.” என்றார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |