குளிர்சாதனப் பெட்டியில் சிக்கி கிடந்த அதிர்ஷ்டம் - ஒரே நாளில் கோடீஸ்வரியான தாய்
Lottery
Austria
By pavan
அவுஸ்திரேலியாவில் குளிர்சாதனப் பெட்டியின் கதவில் சிக்கியிருந்த அதிர்ஷ்ட இலாபச்சீட்டின் மூலம் பெண் ஒருவருக்கு 2 மில்லியன் டொலர் பரிசு கிடைத்துள்ளது.
சிட்னி நகரில் வசிக்கும் குறித்த பெண், கடந்த ஜூன் மாதம் 24 ஆம் திகதி அதிர்ஷ்ட இலாபச்சீட்டினை கொள்வனவு செய்துள்ளார்.
எனினும் அந்த அதிர்ஷ்ட இலாபச்சீட்டு சுமார் ஒரு மாதத்திற்குப் பின்னர் பெண்ணின் சமையலறையின் குளிர்சாதனப் பெட்டியின் கதவில் சிக்கியிருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது.
இரண்டு மில்லியன் டொலர்

இதன் பின்னரே, குறித்த அதிர்ஷ்ட இலாபச்சீட்டின் இரண்டு மில்லியன் டொலர் பரிசுத்தொகை இருப்பது தெரியவந்துள்ளது.
இந்த நிலையில், பரிசை பெற்றுக்கொண்ட பெண், அடமானத்தில் இருக்கும் தமது வீட்டை மீட்கவும், எஞ்சிய தொகையினை தமது பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக பயன்படுத்தப்போவதாகவும் தெரிவித்துள்ளார்.
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி