யாழ்ப்பாணத்தில் மீண்டும் மிரட்டும் எலிக்காய்ச்சல் : இருவர் அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதி
Jaffna
Sri Lankan Peoples
Doctors
By Sumithiran
யாழ்ப்பாணத்தில்(jaffna) கட்டுப்பாட்டிற்குள் எலிக்காய்ச்சல் கொண்டு வரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டபோதிலும் தற்போது இருவர் எலிக்காய்ச்சல் அறிகுறிகளுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பருத்தித்துறை(point pedro) ஆதார வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவிலேயே இவர்கள் இருவரும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதி
நான்கு நாட்கள் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட மேற்படி இருவரும் நோய் மிகவும் தீவிரமடைந்த நிலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
மக்கள் தற்போது முன்னெடுக்கும் தடுப்பு நடவடிக்கைகளைத் தொடர்ந்து பின்பற்ற வேண்டும். ஆரம்பத்திலேயே வைத்தியசாலைக்கு வர வேண்டும். சிகிச்சை எடுக்க வேண்டும். இதன் மூலம் நோய் தீவிரமாகுவதையும் உயிரிழப்பையும் தடுக்கலாம் என்று பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை வைத்தியர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி