மாகாண சபைச் சட்டங்களில் ஒரு சிறிய திருத்தம் மேற்கொண்டு தேர்தலை நடத்த முடியும் - ரவூப் ஹக்கீம் கருத்து
மாகாண சபைத் தேர்தலினை நடாத்துவதற்கு முன்னர் அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் குறித்து கலந்துரையாடி பொதுமக்களின் கருத்தை அனுமதிக்க முடியும் என ஏ.சுமந்திரன் சுட்டிக்காட்டிய போது அதிபர் ரணில் விக்ரமசிங்க அதிருப்தி அடைந்ததாக சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
இன்று (08) தென்னிலங்கையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஊடகங்களுக்கு ஹக்கீம் மேற்கண்டவாறு கூறினார்.
கடந்த மாதம் 26 ஆம் திகதி அதிபரால் கூட்டப்பட்ட சர்வகட்சி மாநாட்டில் இடம்பெற்ற விடயங்கள் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே ஹக்கீம் மேற்கண்டவாறு கூறியிருந்தார்.
அதிகாரப்பகிர்வு
அதிபர் நேர்மையானவராக இருந்தால் மாகாண சபைகள் சட்டத்தில் சிறிய திருத்தம் ஒன்றை மேற்கொண்டு தேர்தலை நடத்த முடியும்.
முஸ்லிம்களுக்கு இருக்கும் அதிகாரப்பகிர்வு தொடர்பான பிரச்சினைகளை விடவும், பொது நிர்வாகத்தில் முஸ்லிம் மாவட்ட செயலாளரை நியமிக்க இயலாமை தொடர்பான பாரிய பிரச்சினைகள் உள்ளன எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.