உயர்தரப் பரீட்சை பெறுபேறு மீளாய்வு குறித்து வெளியான அறிவிப்பு
2025 ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் நேற்று நள்ளிரவு வெளியாகிய நிலையில் பரீட்சைப் பெறுபேறுகளை மீள்திருத்தம் செய்யவுள்ள மாணவர்களுக்கு இலங்கைப் பரீட்சைத் திணைக்களம் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.
அதன்படி, பெறுபேறுகளின் மீளாய்வுக்காக விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள், http://onlineexams.gov.lk/onlineapps எனும் இணையத்தளத்தினூடாக நிகழ்நிலையில் (Online) மாத்திரம் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் 06.04.2026 தொடக்கம் 22.04.2026 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் மாணவர்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும் என பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.
பரீட்சைத் திணைக்களம்
அத்துடன் பாடசாலைகளின் அச்சிடப்பட்ட பரீட்சைப் பெறுபேற்று அட்டவணைகள், மீளாய்வு செய்யப்பட்ட பெறுபேறுகள் வெளியான பின்னரே அதிபர்களுக்கு அனுப்பி வைக்கப்படும் என பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பரீட்சைப் பெறுபேறுகள் குறித்த மேலதிக விசாரணைகளுக்காக நேரடி அழைப்பு எண்: 1911, தொலைபேசி எண்கள்: 0112784208, 0112786616, 0112784537, 0112785413, தொலைநகல் (Fax): 0112784422 மின்னஞ்சல்: gcealexam@gmail.com ஆகியவற்றின் ஊடாக தொடர்புகொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மத்திய கிழக்கு போரால் இலங்கையில் பாரிய பொருளாதார சவால்! 2 நாட்கள் முன்
ஈழப் போராட்டத்துடன் பின்னிப் பிணைந்த போர்க்கால அரங்கு…
5 நாட்கள் முன்