மீண்டும் இயங்கும் பலாலி விமான நிலையத்தின் சேவைகள்; உறுதிப்படுத்திய அமைச்சர்!
யுத்தத்தால் மூடப்பட்ட யாழ் பலாலி சர்வதேச விமான நிலையமானது மீண்டும் 2019 ஆம் ஆண்டு ஒக்டோபர் 17 ஆம் திகதி திறக்கப்பட்டது.
பின்னர் நாட்டில் நிலவிய கொவிட் பெருந்தொற்று காரணமாக மீண்டும் மூடப்பட்டது.
தற்போதுவரை திறக்கப்படாமல் உள்ள குறித்த விமான நிலையத்தின் செயல்பாடுகளை மீள ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
உறுதிப்படுத்திய அமைச்சர்

இலங்கையின் மூன்றாவது சர்வதேச விமான நிலையமான பலாலி சர்வதேச விமான நிலையத்தின் பணிகளை மீள ஆரம்பிக்க உள்ளதாக இராஜாங்க அமைச்சர் பிரேமலால் ஜயசேகர தெரிவித்துள்ளார்.
இன்று (05) நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற வரவு செலவுத் திட்ட குழு விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இராஜாங்க அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மீள் ஆரம்பம்

யாழ்ப்பாணம் பலாலி சர்வதேச விமான நிலையத்தின் விமானச் சேவைகளை எதிர்வரும் 12 ஆம் திகதி மீள ஆரம்பிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக துறைமுகங்கள் மற்றும் விமானப் போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் பிரேமலால் ஜயசேகர தெரிவித்துள்ளார்.