ஒட்டுசுட்டான் ஓட்டுத் தொழிற்சாலையை மீள திறக்குமாறு கோரிக்கை
Tamils
Mullaitivu
Parliament of Sri Lanka
Selvam Adaikalanathan
Job Opportunity
By Sathangani
முல்லைத்தீவு - ஒட்டுசுட்டான் ஓட்டுத் தொழிற்சாலையை மீணடும் திறக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் (Selvam Adaikalanathan) கோரிக்கை விடுத்துள்ளார்.
இன்றைய (06.03.2025) நாடாளுமன்ற அமர்வின் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டார்.
குறித்த ஓட்டுத்தொழிற்சாலையானது இடப்பெயர்வு, போர் காரணமாக பல வருடங்களாக மூடப்பட்டிருக்கின்றதாக சுட்டிக்காட்டினார்.
இந்த நிலையில் அதனை மீண்டும் திறப்பதன் ஊடாக பல பொருளாதார ரீதியான முன்னேற்றங்களைக் காண முடியும் என தெரிவித்தார்.
அதைவிட பலருக்கு வேலைவாய்ப்புக்களை வழங்குவதன் மூலமாக அவர்களின் பொருளாதாரப் பிரச்சினையை தீர்த்துக் கொள்ள முடியும் எனக் குறிப்பிட்டார்.
எனவே இந்த ஓட்டுத் தொழிற்சாலையை திறப்பதற்கான முயற்சிகளை அமைச்சர் கவனத்தில் எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


நெருக்கடி நிலைமைகளும் மலையகத் தமிழர்களும் 2 நாட்கள் முன்

ஈழத் தாய்மார்களுக்கு எல்லா இரவுகளும் சிவராத்திரியே…
1 வாரம் முன்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்