கல்வி அமைச்சர் விடுத்துள்ள அறிவிப்பு - மீண்டும் ஆரம்பமாகும் பாடசாலைகள்
Education
School
Prof G L Peiris
Western Province
By Vasanth
நாட்டில் மேல்மாகாணத்தை தவிர ஏனைய இடங்களில் மீண்டும் பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் மேல்மாகாணத்தில் பல பகுதிகளில் மூடப்பட்டுள்ள பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிக்கவுள்ளதாக கல்வியமைச்சர் ஜிஎல்பீரிஸ் தெரிவித்துள்ளார். பல பகுதிகளில் கொரோனா பரவல் ஆபத்தில்லை என்பதால் பாடசாலைகளை மூடிவைத்திருக்கவேண்டிய அவசியமில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அடுத்த இரண்டு வாரங்களுக்குள் மேல்மாகாணத்தில் பாடசாலை அனைத்து தரங்களையும் சேர்ந்த மாணவர்களுக்கும் ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
சுகாதார அதிகாரிகள் கொவிட் 19 தொடர்பான ஜனாதிபதி செயலணியை சேர்ந்தவர்களுடனான கலந்துரையாடல்களின் பின்னர் பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் இடம்பெறும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி